தமிழ் ரீமேக்காகும் லுசியா

By ஸ்கிரீனன்

'லுசியா' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையை வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களைத் தயாரிப்பவர் சி.வி.குமார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனம் இவரது நிறுவனத்தோடு இணைந்து படங்களைத் தயாரிக்கவிருக்கிறது.

கன்னட திரையுலகில் வெளிவந்து, இந்தியளவில் பெரும் வரவேற்பை பெற்ற 'லுசியா' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையை சி.வி.குமார் வாங்கியிருக்கிறார்.

லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்கள் தேர்வு செய்த படம் 'லுசியா' . இப்படத்தினை இயக்கியவர் பவன் குமார். இவர் இப்படத்தினை இயக்கிய கதை மிகவும் சுவாரசியமானது.

'Lifeu Ishtene' படத்தினைத் தொடர்ந்து 'லுசியா' தான் தனது அடுத்த படம் என்று தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்தார் பவன் குமார். இப்படத்தின் கதையை பல்வேறு தயாரிப்பாளர்களிடம் கூறியும் யாரும் தயாரிக்க முன்வரவில்லை.

அதையே தனது ப்ளாக்கில் ஒரு தொடராக எழுத ஆரம்பித்தார். அதற்கு வந்த வரவேற்பைப் பார்த்து தனது இணைய வாசகர்களிடம் படத்தின் தயாரிப்பிற்கான ஆதரவை கேட்க, பலரும் தயாரிக்க முன்வந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து 110 நபர்கள் இணைந்து இப்படத்தினை தயாரிக்க திட்டமிட்டனர். 75 லட்சம் ரூபாயில் இப்படம் தயாரானது. துணை நடிகரான நீனாசம் சதீஷ் நடிக்க இப்படத்தை தயாரித்தனர். படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து ஒரு தனியார் டிவி நிறுவனம் இதன் உரிமையே 95 லட்சம் கொடுத்து வாங்கியது.

தயாரித்த கதை சுவாரசியமானது மட்டுமல்லாமல், விருதுகள், விமர்சகர்கள் மத்தியிலும் வரவேற்பினை பெற தவறவில்லை 'லுசியா'.

சி.வி.குமார் இப்போது தான் படத்தினை உரிமையை வாங்கியிருப்பதால், இயக்குவது யார், யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்