காதல் திருமணம்தான்: அனுஷ்கா பேட்டி

By ஆர்.சி.ஜெயந்தன்

காதல் திருமணம் செய்துகொள்வதில் எனக்குத் தடை இல்லை என்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை அனுஷ்கா கூறினார். தென்னிந்திய சினிமாவில் கவனத்துக்குரிய கதாநாயகியாக வலம் வரும் அனுஷ்கா, நீண்ட இடைவெளிக்குப்பிறகு நேற்று சென்னை வந்திருந்தார்.

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா - அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இரண்டாம் உலகம் படம் வரும் 22ம் தேதி தமிழகத்திலும், ஆந்திராவிலும் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் வகையாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நீங்கள் காதல் திருமணம் செய்வீர்களா என்று அனுஷ்காவிடம் கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த அனுஷ்கா, “காதல் திருமணம் செய்துகொள்வதில் எனக்குத் தடை இல்லை. அதேபோல நமக்கு வரும் கணவன் உயரமா குள்ளமா என்றெல்லாம் பார்க்கமுடியாது” என்று குறிப்பிட்டார்.

பின்னர் ஆர்யாவிடம் உங்களுக்கு பொருத்தமான ஜோடி யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆர்யா “ எனக்கு பிடித்த, பொருத்தமான ஜோடி நயன் தாராதான். இரண்டாம் உலகம் படம் வெளியானால் அனுஷ்கா என்று ரசிகர்கள் சொல்லக்கூடும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

10 mins ago

சினிமா

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்