பிஜு விஸ்வநாத் இயக்கவிருக்கும் படத்தினை தயாரித்து, வசனம் எழுத திட்டமிட்டு இருக்கிறார் விஜய் சேதுபதி.
'மெல்லிசை', 'இடம் பொருள் ஏவல்', 'புறம்போக்கு' என வரிசையாக படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தற்போது பட தயாரிப்பிலும் ஈடுபட திட்டமிட்டு இருக்கிறார்.
முதலில் முதல் பிரதி அடிப்படையில் 'சங்குதேவன்' படத்தயாரிப்பில் ஈடுபட்டார். ஆனால், சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. தற்போது நேரடி தயாரிப்பாக 'ஆரஞ்சு மிட்டாய்' என்ற படத்தினை தயாரிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி.
'ஆரஞ்சு மிட்டாய்' படத்தினை பிஜு விஸ்வநாத் இயக்கவிருக்கிறார். ஆங்கிலம், இந்தி, ஜப்பானிய மொழி, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களை இயக்கி, உலகளவில் பல்வேறு விருதுகளை பெற்றவர் பிஜு விஸ்வநாத்.
உலகப்புகழ் பெற்ற இயக்குநர் பிஜு விஸ்வநாத்துடன் விஜய் சேதுபதி இணைந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இப்படத்தை தயாரிப்பதுடன், சிறு வேடத்தில் மட்டுமே நடிக்கிறார் விஜய் சேதுபதி.
’ஆரஞ்சு மிட்டாய்’ மூலம் திரையுலகில் வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago