நான்காவது முறையாக தள்ளிப் போகிறது கோச்சடையான் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

இந்த மாதம் வெளியாகவிருந்த கோச்சடையான் திரைப்படத்தின் பாடல்கள், மீண்டும் தள்ளிப் போகிறது. இதனால், படத்தின் வெளியீடும் தள்ளிப் போகிறது.

ஏற்கனவே ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட கோச்சடையான் படத்தின் பாடல்கள், கிறிஸ்துமஸ் வாரத்தில் வெளியாகலாம் என செய்தி வந்தது. இப்போது, மீண்டும் ஆடியோ ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகும் என சொல்லப்பட்டிருந்தது, ஆனால் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முடியாத நிலையில், அதுவும் சாத்தியமில்லை என ஆனது. இப்போது, ஆடியோவே ஜனவரி மாதம் தான் வெளியாகும் என்பதால், படத்தின் ரிலீஸும் தள்ளிப் போகிறது. இது ரசிகர்களை கடும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ், அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை என்றாலும், மோஷன் கேப்சர் (motion capture) தொழில்நுட்பம் அதிக நேரம் எடுப்பதால் தான் இந்தத் தாமதம் எனத் தெரிகிறது. இப்போதைக்கு, ஜனவரி முதல் வாரத்தில் படத்தின் ஆடியோவும், தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று திரைப்படமும் ரிலீஸ் ஆகுமென்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்