ட்விட்டரில் இணைந்த வடிவேலு, தமன்னா!

By செய்திப்பிரிவு

பல்வேறு திரையுலக பிரபலங்கள் இருக்கும் ட்விட்டர் தளத்தில், தற்போது வடிவேலு மற்றும் தமன்னா ஆகியோர் இணைந்திருக்கிறார்கள்.

இந்திய திரையுலகினர் மத்தியில் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளம் ட்விட்டர். திரையுலகினர் அத்தளத்தில் தங்களுக்கென்று பிரத்யேக கணக்கு ஒன்றிணை தயார் செய்து, தாங்கள் நடித்து வரும் படங்களின் தகவல்கள், அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்கள் போன்றவற்றைப் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.

ரஜினி, கமல், அஜித், நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட சில குறிப்பிட்ட நடிகர்கள், நடிகைகள் மட்டுமே ட்விட்டர் தளத்தில் இணையாமல் இருக்கிறார்கள்.

காமெடி நடிகர் விவேக் சமீபத்தில் தான் ட்விட்டர் தளத்தில் இணைந்தார். தற்போது வடிவேலு (@Actor_Vadivelu), தமன்னா (@tamannaahspeaks) ஆகியோர் ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கிறார்கள்.

முதல் செய்தியாக, “வந்துட்டேன்யா வந்துட்டேன்” என்று வடிவேலு ட்விட்டர் தளத்திலும், ”Hi ! This is tamannaah, jst joined twitter, lookin forward to connect with all the tweeples.” என்று தமன்னாவின் ட்விட்டர் தளத்திலும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

பலரது நடிகர்களின் ரசிகர்கள் போலியான கணக்குகளைத் தொடங்கி நடத்திவரும் ட்விட்டர் தளத்தில், வடிவேலு மற்றும் தமன்னா ஆகியோரது கணக்குகள் உண்மையானது தானா என்று இருவருமே அறிவிக்க இருக்கிறார்களா என்பது தான் தற்போதைய கேள்வி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்