கடன் தொகை ரூ. 29 லட்சத்தை உயர் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யாததால் நடிகர் கவுதம் கார்த்திக் நடித்த முத்துராமலிங்கம் திரைப்படத்தை திரையிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.வி.பிரகாஷ் என்பவர் கடந்த வாரம் தாக்கல் செய்த மனுவில், ‘‘நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக், நெப்போலியன் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘முத்துராமலிங்கம்’. இந்த படத்தை குளோபல் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் பிரகாஷ் மற்றும் நரசிம்மராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் இருவரும் என்னிடம் பல்வேறு தேதிகளில், வங்கி மூலமாகவும், ரொக்கமாகவும் ரூ.28 லட்சத்து 55 ஆயிரத்தை கடனாக பெற்றுள்ளனர். இந்த கடன் தொகையை திரைப்படத்தை வெளி யிடுவதற்கு முன்பாக திருப்பித் தருவதாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல், ‘முத்து ராமலிங்கம்’ திரைப்படத்தை பிப்ரவரி 2-ல் வெளியிடப் போவ தாக விளம்பரம் செய்துள்ளனர்.
எனவே எனக்குச் சேர வேண்டிய கடன் தொகை மற்றும் அதற்கான வட்டி சேர்த்து மொத்தம் ரூ.29 லட்சத்து 40 ஆயிரத்து 650- ஐ கொடுக்காமல் முத்துராமலிங்கம் படத்தை வெளியிடக்கூடாது என தடை விதிக்க வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்த மனு கடந்த பிப்ரவரி 24-ம் தேதி நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘முத்துராமலிங்கம்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இருவரும் ரூ.29 லட்சத்தை உயர் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த திரைப்படம் கடந்த 24-ம் தேதி எவ்வித தடையுமின்றி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி பி.வேல் முருகன் முன்பு நடந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘உயர் நீதிமன்ற உத்தரவுப்படி எதிர்மனுதாரர்கள் ரூ.29 லட்சத்தை இன்னும் டெபாசிட் செய்யவில்லை’’ என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, ‘‘ரூ.29 லட்சத்தை டெபாசிட் செய் யாததால் ‘முத்துராமலிங்கம்’ படத்தை திரையிட தடை விதித்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago