இசை வெளியானது முதல் ஐ-டியூன்ஸ் தளத்தில் முதல் இடத்தில் இருக்கிறது ‘ஆரம்பம்’.
அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா, அதுல் குல்கர்னி என ஒரு பட்டாளமே நடித்திருக்கும் படம் ‘ஆரம்பம்’. யுவன் இசையமைக்க, விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார். தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது.
சமீப காலமாக எந்த ஒரு விழாவிலும் - தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவிலும் கூட - கலந்து கொள்ளாதவர் அஜித். இதனால் தயாரிப்பாளர்கள் அஜித் படத்தின் இசை வெளியீட்டு விழாவினை பிரம்மாண்டமாக திட்டமிடுவதில்லை.’ஆரம்பம்’ படத்தின் இசை வெளியீடும் எந்த ஒரு விழாவும் இல்லாமல், நேரடியாக கடைகளுக்கு வந்திருக்கிறது.
இணையத்தில் ‘ஆரம்பம்’ என்றாலே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் இசை சாதனை படைக்க துவங்கிவிருக்கிறது. இசை வெளியானது முதல் ஐ - டியூன்ஸ் தளத்தில் தொடர்ந்து முதலிடத்தில் வகிக்கிறது.
’ஆரம்பம்’ படத்தின் விநியோக உரிமைக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. கோயம்புத்தூர் ஏரியா உரிமையை ‘காஸ்மோ’ சிவாவும், மதுரை மற்றும் ராமநாதபுரம் ஏரியா உரிமையை பிரபல விநியோகஸ்தர் அழகரும் வாங்கியிருக்கிறார்கள்.
‘ஆரம்பம்’ படத்திற்கு போட்டியாக ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ தீபாவளிக்கு வெளியாகிறது. ‘ஆரம்பம்’ படத்தின் சென்சார் பணிகளை அக்டோபர் 15ம் தேதிக்குள் முடித்து, படத்தின் விளம்பரப் பணிகளை துரிதப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
‘ஆரம்பம்’ படத்தின் புதிய டிரெய்லரையும் யூ-டியூப் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். ’சாவுக்கு பயந்தவனுக்கு தான் தினம் தினம் சாவு. எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒரு தடவை தான் சாவு’, ‘இப்பதானே ஆரம்பிச்சிருக்கோம்.. It's Just the Beginning' என அஜித்தின் வசனங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago