சாண்ட்ரா எமி, யுரேகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'சிவப்பு எனக்கு பிடிக்கும்'. யுரேகா நடித்து, இயக்கியிருக்கிறார். ஜே.எஸ்.கே நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருக்கிறது.
இப்படத்தின் பத்திர்க்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் இயக்குனர் யுரேகா பேசியது
“இது ஆபாசம் சார்ந்த படம் அல்ல. பொதுவாக ஒரு பாலியல் தொழிலாளி என்றாலே வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு, தொப்புள் தெரிய சந்துகளிலே நடக்கிறவள் என்கிற சித்தாந்தத்தை உடைத்த படம் இது.
பாலியல் தொழிலாளி என்ற வார்த்தை பாலியல் போராளி என்று இப்படம் வெளியான உடன் மாறப் போகிறது. பாலியல் போராளியை முன் வைத்த படம் என்று மட்டும் கூறிவிட முடியாது. இது சமுதாயம் சார்ந்த ஒரு திரைப்படம். குழந்தைகள் மீதான பாலில் வன்முறைக்கு எதிரான ஒரு திரைப்படம். இந்த தொழிலை ஒழிக்க வேண்டுமென்றால், ஒரு வட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் பாலியல் தொழிலை அங்கீகரிக்க வேண்டும்.
வணிக நோக்கத்திற்காக மட்டுமே எடுக்கப்பட்ட திரைப்படம் அல்ல. சமுதாயத்திலே நான் சந்தித்த வன்முறைக் களங்களை ஒரு தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்று சொல்லித்தான், சென்னைக்கு ஒரு சிவப்பு விளக்கு பகுதி தேவை என்ற அறைகூவலை வைத்திருக்கிறோம்.
சென்னை போன்ற நகர் சார்ந்த பகுதிகளில் கட்டவிழ்க்கப்படுகிற வன்முறைக்கு ஒரு தீர்வாக, இந்த தொழிலை அங்கீகரித்து பிரித்தெடுத்து விட்டால், அவர்களுக்கும் ஒரு பாதுகாப்பு கிடைக்கும். இதற்காக பல அமைப்புகளுடன் பேசி, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுத்தான் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறேன்.
இது ஒவ்வொரு குடும்பமும் பார்த்து கண்ணீர் சிந்த வேண்டிய ஒரு படம். ஒரு பெண் குழந்தையை பாலியல் வன்முறைக்கு பலி கொடுத்த ஒரு தகப்பனுடைய கண்ணீர் இந்த திரைப்படம்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago