புதுமுக இயக்குநர் அருண் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கனவு வாரியம்' படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.
தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்சினையை மையாக வைத்து டிசிகாப் சினிமாஸ் தயாரிப்பில் உருவான படம் 'கனவு வாரியம்'. அருண் சிதம்பரம் இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் சர்வதேச அளவில் 7 விருதுகளை வென்றுள்ளது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ரிட்லி ஸ்காட், ஜார்ஜ் லுகாஸ் போன்ற பெரும் இயக்குநர்கள் வென்ற 'ரெமி' விருதை 'கனவு வாரியம்' திரைப்படம் வென்றுள்ளது. இவ்விருதை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் 'கனவு வாரியம்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
'கனவு வாரியம்' படத்தை இந்தியா முழுவதும் வெளியிடும் உரிமையை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிறுவனம் வெளியிடும் முதல் தென்னிந்திய திரைப்படம் இதுவாகும்.
இது குறித்து இயக்குநர் அருண் சிதம்பரம், "உலகின் புகழ்பெற்ற ஹாலிவுட் நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் 'கனவு வாரியம்' படத்தை வெளியிடுவதை எண்ணி பெருமை அடைகிறோம். இப்படம் விருதுக்காக எடுக்கப்பட்ட படமல்ல.
இத்திரைப்படம் காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் கொண்ட பொழுது போக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ளது. வார்னர் பிரதர்ஸ் படத்தை வெளியிடுவதால் 'கனவு வாரியம்' வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அதுவும், 'கனவு வாரியம்' வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இது எங்கள் குழுவினருக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை" என்று சந்தோஷத்துடன் குறிப்பிடார் அருண் சிதம்பரம்.
இந்தியாவில் இருக்கும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டென்சில் டயஸ் கூறுகையில், "'கனவு வாரியம்' எளிய மக்களின் வாழ்வியலை சுவாரசியமாக பேசும் சமூகத்திற்கான படம் மட்டும் அல்ல. இது நம்பிக்கையை விதைக்கும் படமும் கூட. உலகின் புகழ்பெற்ற பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும், பாராட்டுகளையும் வென்ற படத்தை இந்தியாவில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 mins ago
சினிமா
46 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago