பாலா தயாரிப்பில் மிஷ்கின்

By ஸ்கிரீனன்

'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தினைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கவிருக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறார் இயக்குநர் பாலா.

சூர்யா, ஜோதிகா நடித்த 'மாயாவி' படத்தின் மூலம் சினிமா தயாரிப்பில் இறங்கினார் இயக்குநர் பாலா. அதனைத் தொடர்ந்து 'பரதேசி' படத்தினை இயக்கி தயாரித்தார். வேறு இயக்குநர்கள் படத்தினை தயாரிப்பதை 'மாயாவி' படத்தோடு நிறுத்திக் கொண்டார்.

தற்போது 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தினைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கவிருக்கும் படத்தினை தயாரிக்கவிருக்கிறார் பாலா. திகில் பின்னணியில் ஒரு காதல் கதையை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் மிஷ்கின்.

பாலா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தினை பாலா - சசிகுமார் இருவருமே இணைந்து தயாரிக்கவிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து பாலா, மிஷ்கின் இயக்கவிருக்கும் படத்தினை தயாரிக்க இருக்கிறார். மிஷ்கின் படத்தில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.

'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தினைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாலா, "தமிழ் சினிமாவின் பொக்கிஷம் இயக்குநர் மிஷ்கின்" என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்