இயக்குநர் அட்லீ தனது 'ராஜா ராணி' படத்தின் வெற்றியை கமல்ஹாசனுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில், அட்லீ இயக்கிய படம் 'ராஜா ராணி'. பாடல்களில் இளமை துள்ளல், கலர்ஃபுல்லான மேக்கிங், நயன்தாராவின் நடிப்பு, சந்தானத்தின் காமெடி, ஆர்யா, ஜெய் இருவரின் நடிப்பு என மொத்தத்தில் இளைஞர்களின் மனதைக் கவர்ந்தது.
இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பைத் துவக்கி வைத்தவர் நடிகர் கமல்ஹாசன். இதனால் இயக்குநர் அட்லீ கமலுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால் படத்தின் 25ம் நாளை முன்னிட்டு கமலை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
இது குறித்து அட்லீ, “ ‘ராஜா ராணி’ படத்தை கமல் சார் தான் துவக்கி வைத்தார். வெற்றி பெற்றதும் அவரிடமே ஆசி பெற வேண்டும், அவருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அவரைச் சந்தித்தபோது, என்னுடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றி குறித்து விவரமாக கேட்டு விசாரித்தார்.பேசும்போது, அவரின் திரையுலக ஞானம் எவ்வளவு பெரியது எனப் புரிந்தது.
இந்நேரத்தில் எனது தயாரிப்பாளர்கள் ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ , ஏ. ஆர் முருகதாஸின் ‘ஏ ஆர் எம் புரடக்ஷன்ஸ்’, மற்றும் ‘நெக்ஸ்ட் பிக் பிலிம்ஸ்’ நிறுவனம், மற்றும் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கு என் மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago