ஜக்கு: டேய் மக்கு... போன வாரம் 'மொட்ட சிவா கெட்ட சிவா' பார்க்க கூப்பிடலைன்னு கோபிச்சுக்கிட்டல்ல.
மக்கு: ஆமாம் டா. அதுக்காக இந்த வாரம் அதே படத்தை பார்க்க கூப்புடுறியா. இந்த பழிவாங்கும் படலாம் வேணாம் டா.
ஜக்கு: இல்லை டா. 'புரூஸ் லீ' பார்க்கலாம் வர்றியா.
மக்கு: அச்சச்சோ.. நான் அவசரமா வெளியே கிளம்புறேன். நீ படம் பார்த்துட்டு சொல்லு.
ஜக்கு: ஓ.கே. டா..
படம் பார்த்த பிறகு...
மக்கு வீட்டில் அமர்ந்திருக்கிறார். ஜக்கு வருகிறார்.
மக்கு: வாடா. எப்படி இருக்கு படம்?
ஜக்கு முகத்தை அஷ்டகோணலாக்கி காட்டுகிறார்.
மக்கு: அவ்ளோ மோசமாவா இருக்கு? புரியுற மாதிரி சொல்லுடா.
ஜக்கு: அதை எப்படி மச்சான் என் வாயால சொல்லுவேன்?
மக்கு: ஜி.வி.பிரகாஷ் படம்தானே. அவர்தான் தனி ரூட் வெச்சிருக்காரே. வெத்து உதார் விடுறது, ஆளைப் பார்த்து பம்முறதுன்னு டபுள் மீனிங்லயே டாக்ஸி ஓட்டுவாரே. இந்தப் படத்துலயும் அப்படிதானா?
ஜக்கு: வர வர நீ யூகத்துலயே சொல்ற.
மக்கு: அப்படி சொன்னாலும் அது சரியாதானே இருக்கு.
ஜக்கு: அப்படி தான் இருந்து தொலையுது. என் கிரகத்தை எங்கே போய் சொல்ல?
மக்கு: கதை சொல்லு
ஜக்கு: ஜி.வி.பிரகாஷும், பால சரவணனும் நண்பர்கள். ஒரே வீட்ல இருந்துக்கிட்டு ஒண்ணும் மண்ணுமா பழகுறாங்க, ஊர் சுத்துறாங்க, குடிக்குறாங்க, காதலிக்குற பொண்ணை கலாய்க்குறாங்க, அந்தப் பொண்ணுகிட்டயே டபுள் மீனிங் பேசுறாங்க...
மக்கு: 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', 'கடவுள் இருக்கான் குமாரு' படத்துலயும் ஜி.வி. இதைத்தானே பண்ணாரு.
ஜக்கு: அவர் என்ன அரசியல்வாதியா? அந்தப் படமோ, அடுத்த படமோ, இந்தப் படமோ வார்த்தை மாறாம அப்படியே இருக்கார். எவ்ளோ பெரிய விஷயம்?
மக்கு: அதுக்கு ஏன் இந்தப் படம்? அதே படத்தை மறுபடியும் பார்த்தா போச்சு.
ஜக்கு: பேசப்படாது. இப்படில்லாம் வம்பு வளர்க்குற மாதிரி பேசுறது நல்லதுக்கில்லை.
மக்கு: சரி.. சரி.. அப்புறம்?
ஜக்கு: வெட்டியா ஊர் சுத்துற ஜி.வி.யோட பேரு 'புரூஸ் லீ'. ஆனா, அவருக்கு சண்டை போடவே தெரியாது. இப்படிப்பட்ட நிலையில ஒரு கொலையைக் கண்ணால பார்த்துடறார். அதனால் வர்ற பிரச்சினைகளும், அதற்கான விளைவுகளும்தான் மீதிக் கதை.
மக்கு: அப்பாடா. அப்புறம் ஆரம்பிக்குதா ஆக்ஷன் பிளாக்.
ஜக்கு: உன் ஆர்வத்தை நான் பாராட்டுறேன். ஆனா, உன் எதிர்பார்ப்பு புஸ் ஆகிடுச்சுப்பா.
மக்கு: அந்த அளவுக்கு வொர்த் இல்லையா?
ஜக்கு: இல்லைப்பா. சரக்கடிச்சிட்டு சலம்புறாரு. ஆபாசமா பேசுறாரு. கதாநாயகனா தன்னை வளர்த்துக்காம இன்னும் ஸ்கூல் புள்ளையாவே இருக்காருப்பா.
மக்கு: அய்யய்யே...
ஜக்கு: ஹீரோயின் கீர்த்தி கர்பந்தா சும்மா அலட்டலா வந்து போறாங்க.
மக்கு: நடிப்பு?
ஜக்கு: சும்மா சும்மா கொஞ்சுறது, இல்லைன்னா கோவிச்சுக்குறது, முட்டாள்தனமா சண்டை போடுறது, ஐடியா கொடுக்கிறேன்னு மொக்கை பண்றதுன்னு ஒரே டெம்ப்ளேட் தான்.
மக்கு: என்னப்பா இப்படி சொல்லிட்டே.. யார்தான் நல்லா நடிச்சு இருக்காங்க?
ஜக்கு: ராமதாஸ் கொஞ்சம் பரவாயில்லை. வில்லனா வந்தாலும் சில இடங்கள்ல ஆறுதலா இருக்கார். ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், நான் கடவுள் ராஜேந்திரன்னு சில பேர் இருக்காங்க.
மக்கு: பால சரவணன் காமெடி இல்லையா?
ஜக்கு: சித்தப்பா செத்துப் போய்ட்டாருன்னு சித்திகிட்ட கூச்ச நாச்சம் இல்லாம பேசுறாரு, என் ஆளைப் பார்த்தா எனக்கே மூடு வராதுன்னுல்லாம் தப்புத் தப்பா பேசுறாருப்பா. ஹீரோயின் கூட வில்லனைப் பார்த்து 'உனக்கெல்லாம் மூடே வராது'ன்னு கேட்குறாங்க? இந்த சென்சார் போர்டெல்லாம் தூங்குறாங்களான்னு தெரியலை.
மக்கு: கதை திருப்பம், சீரியஸ், நோக்கம் எதுவும் இல்லையா?
ஜக்கு: மன்னிச்சுக்கோ மக்கு. அப்படி ஒண்ணு இருந்தா நான் எனக்கு சொல்றதுல எந்த ஆட்சேபணையும் இல்லை. துரதிர்ஷ்டவசமா படத்துல அப்படி ஒரு வஸ்து தேடிப் பார்த்தும் கிடைக்கலை.
மக்கு: டெக்னிக்கல் டீம்?
ஜக்கு: பி.வி.ஷங்கர் கேமராவுல குறை சொல்ல எதுவும் இல்லை. ஜி.வி. இசையில சும்மா ஜல்லி அடிச்சு இருக்கார். எந்தப் பாட்டும் மனசுல நிக்கலை. பிரதீப் ராகவ், மனோஜ்னு ரெண்டு எடிட்டரும் யோசிக்காம நிறைய கத்தரி போட்டிருக்கலாம்.
மக்கு: இயக்குநர்?
ஜக்கு: பிரசாந்த் பாண்டியராஜ். முதல் படம்ப்பா. அதனால நோ கமென்ட்ஸ்.
மக்கு: நான் உங்களுக்கு நன்றி சொல்லவா? இல்லை பிரசாத்துக்கு நன்றி சொல்லவா?
ஜக்கு: ஏன்?
மக்கு: நீ படம் பார்க்க கூப்பிட்ட. பிரசாத் ஆபிஸ்ல வேலை இருக்குன்னு சொல்லி என்னை தடுத்தாட் கொண்டான். அதான் கேட்டேன்.
ஜக்கு: பிஎஸ்என்எல் விளம்பரத்தையே உல்டா பண்ணி கலாய்க்குறியா?
மக்கு: இல்லைப்பா.
ஜக்கு: பார்க்காத படத்துக்கு நீ ஒரு பஞ்ச் சொல்லு பார்க்கலாம்.
மக்கு: ஆறாத ரணம்.
ஜக்கு: பொருத்தமான பஞ்ச்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago