செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்துக்கு ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சி 3' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இதற்கு ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் மாத இறுதியில் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது. சென்னை, மும்பை, ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
தற்போது இயக்கி வரும் 'மன்னவன் வந்தானடி' படத்தைத் தொடர்ந்து, சூர்யாவின் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் செல்வராகவன்.
முக்கிய செய்திகள்
சினிமா
35 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago