காளி வேஷமிடும் கார்த்தி!

By செய்திப்பிரிவு

'அட்டகத்தி' ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘காளி' என்று தலைப்பிட்டுருக்கிறார்கள்.

கார்த்தி நடிப்பில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா', ‘பிரியாணி' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. ‘ஆல் இன் ஆல் அழகுராஜா' தீபாவளி அலங்காரமாகவும், ‘பிரியாணி' பொங்கல் விருந்தாகவும் வெளியிட திட்டமிட்டுருக்கிறார்கள்.அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘அட்டகத்தி' ரஞ்சித் இயக்கும் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம். நாயகியாக கத்ரீன் த்ரஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.இப்படத்தின் தகவலை தற்போது தான் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் பிரபு தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுருக்கிறார். இசை, ஒளிப்பதிவு போன்ற தகவல்களை இன்னும் வெளியிடவில்லை தயாரிப்பு நிறுவனம்.

'மூன்று முகம்' படத்தில் ரஜினி நடித்த அலெக்ஸ் பாண்டியன் என்கிற பாத்திரத்தின் பெயரில் கார்த்தி நடித்த படம் பாக்ஸ் ஆபிஸில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை. தற்போது ரஜினி நடித்த படத்தினை பெயரையே தனது அடுத்த படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார் கார்த்தி.

கதாபாத்திரத்தின் பெயர் கைகொடுக்கவில்லை, படத்தின் பெயராவது கைகொடுக்கிறதா.. பார்ப்போம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்