விஷாலோடு ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்

By ஸ்கிரீனன்

இயக்குநர் ஹரி இயக்கவிருக்கும் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் இணைகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

'சாமி', 'வேல்', 'சிங்கம்', 'சிங்கம்-2' என பரபர திரைக்கதை அமைக்கப்பட்ட படங்களை இயக்கிய ஹரி, அடுத்து, விஷாலோடு மீண்டும் இணைகிறார். முன்னரே விஷாலோடு 'தாமிரபரணி' தந்திருந்தார் இயக்குநர் ஹரி.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்கள் தயாராகிவிட்ட நிலையில், விஷாலோடு ஜோடி சேர ஸ்ருதிஹாசனைக் கேட்டிருக்கிறார்கள்.

ஹரி இயக்கும் படங்களுக்கு தெலுங்கிலும் வரவேற்பு இருப்பதால், தெலுங்கில் பிரபலமாக இருக்கும் நாயகியை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டனர். ஸ்ருதிஹாசன், பவன் கல்யாணுடன் நடித்த ‘கப்பர் சிங்’படம் வெற்றி பெற்றதால், தற்போது ஸ்ருதிஹாசனுக்கு அங்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, இப்படத்தில் நடிக்க அவரை அணுகியிருக்கிறார்கள். ஸ்ருதியும் தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம்.

இது ஒரு 'முக்கோண ஆக்‌ஷன் கதை' என்கிறார் ஹரி.

ஹரி படங்களில் எப்போதும் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருப்பார்கள். வழக்கம் போலவே இப்படத்திலும், சத்யராஜ், ராதிகா, சித்தாரா, கௌசல்யா ஆகியோர் நடிக்க உள்ளனர். நகைச்சுவை பகுதிக்கு சூரியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

ஏப்ரம் மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்