விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தில் சாய் பல்லவி விலகவே தமன்னா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'வாலு' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்காக கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் விஜய் சந்தர். அப்படத்தைத் தொடர்ந்து பல்வேறு நாயகர்களை சந்தித்து கதை கூறி வந்தார் விஜய் சந்தர்.
அவர் கூறிய கதை பிடித்துவிடவே, விக்ரம் உடனடியாக தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். இப்படத்தின் நாயகிக்கு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் இயக்குநர் விஜய் சந்தர்.
இறுதியாக சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், படப்பிடிப்பு தேதிகளில் குழப்பம் ஏற்படவே தற்போது அவருக்கு பதிலாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
சுகுமார் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார். இம்மாதம் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பிலும், 'துருவ நட்சத்திரம்' படத்திலும் மாறிமாறி கவனம் செலுத்தவுள்ளார் விக்ரம்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago