நடிகையைக் திருமணம் பண்ணிக்கொள்வாரா விஷால்?

By ஆர்.சி.ஜெயந்தன்

தயாரிப்பில் இருக்கும்போதே பரபரப்பைக் கிளப்பும் ஒரு ஜோடி, மீண்டும் ஒரு படத்தில் இணைந்தால் வேறு வினையே வேண்டாம். காதல் கிசுகிசு காட்டுத் தீ மாதிரி பரபரக்கும். ‘பாண்டிய நாடு’ படத்தில் ஜோடி சேர்ந்திருக்கும் விஷால் - லட்சுமி மேனன் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்று பேச்சுக்கள் கிளம்ப, விஷாலிடமே இதைக் கேட்டுவிடலாம் என்று அவரது அலுவலகத்துக்குப் போனால் மனிதர் லட்சுமி மேனனோடு நெருக்கமாக உட்கார்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். இருவரிடமும் உரையாடியதிலிருந்து...

கேள்விப்பட்டது நிஜம்தானா விஷால்?

என்ன கேள்விப்பட்டிங்க?

நீங்களும் லட்சுமிமேனனும் ரொம்ப நெருங்கீட்டிங்களாமே?

படத்துல நெருக்கமா நடிச்சிருக்கோம். பாடல் காட்சிகள்ல இன்னும் கொஞ்சம் அதிமான நெருக்கம்னு சொல்லலாம். இதுவரைக்கும் லட்சுமிய நீங்க, நடிப்புல ஒரு கை பார்க்குற பொண்ணாத்தானே பார்த்துருக்கீங்க. முதல்முறையா இதுல நடிப்போடு சேர்ந்து கமர்ஷியல் ஹீரோயினுக்கு ஒரு இடம் இருக்கும் இல்லையா ? அதுல புகுந்து விளையாண்டிருக்காங்க. பொள்ளாச்சியில கடைசியா செட் போட்டு எடுத்த பாட்டுல, ‘ அய்யோ! இது நம்ம லட்சுமியான்னு ஆடிப்போவீங்க! அப்படி ஒரு ஆட்டம்னா பாருங்க!”

நீங்களும் லட்சுமி மேனனும் அடுத்த படத்துலயும் சேர்ந்து நடிக்கப்போறதாவும், உங்க ரெண்டு பேருக்கு இடையில ரொம்ப ஆழமான நட்பு உருவானதுதான் அதுக்கு காரணம்னு கேள்விப்பட்டோமே?

எவ்வளவு நல்ல மனசோட நட்புன்னு நீங்களே சொல்றீங்க. இப்போ எங்க கெமிஸ்ட்ரி சூப்பர்ன்னு இந்தப் படத்தோட இயக்குனர் சுசீந்திரன் சொன்னார். அதனால இன்னொரு படத்துல சேர்ந்து நடிச்சா தப்பில்லையே. ஏற்கனவே சசிகுமார்கூட இரண்டு படத்துல நடிச்சிருக்காங்க. அதுக்காக சசிகூட காதல்ன்னா சொன்னாங்க? லட்சுமி மேனன் ரொம்ப நல்ல பொண்ணு! படத்தோட புரமோ வேலைகளுக்கு கொஞ்சம் வந்து முகத்தை காட்டினா நல்லா இருக்கும்ன்னு ரிக்வெஸ்ட் பண்ணினேன். ஜாஸ்ட் ஒரு எஸ்.எம்.எஸ். கொடுத்தா போதாதான்னு சொல்லிஆடியோ ரிலீஸூக்கு வந்தவங்க. நாலு நாளா இங்கயே தங்கிடாங்கன்னா பாருங்க! இப்போ நீங்க என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்வாங்க!

(லட்சுமியிடம்) விஷாலுக்கும் உங்களுக்கும் இடையில ஓடிக்கிட்டு இருக்க லவ் டிராக் பத்தி சொல்லுங்க?

கண்டிப்பா! பாண்டிய நாடு படத்துல மட்டும்தான் எங்க ரெண்டுபேருக்கும் லவ் டிராக் இருக்குன்றதை தெளிவா எழுதிக்கோங்க. நான் மலர்ங்கிற கேரக்டர்ல ஸ்கூல் டீச்சரா நடிக்கிறேன். விஷால் சிவகுமார்ங்கிற கேரக்டர்ல வர்றார். எங்க காதல் ரொம்ப பேசப்படும். ஏன்னா, விஷால் ரொம்ப பயந்த கேரக்டர். அவரை காதலிச்சுட்டு நான் படுற அவஸ்தைகள் ரொம்ப இண்டஸ்ட்ரிங்கா இருக்கும்.

விஷால் மாதிரி ஒரு சினிமா ஹீரோவை நிஜ வாழ்க்கையில் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிறதுல உங்களுக்கு விருப்பம் இருக்கா?

இப்போ 21 வயசு ஆகுது. அதுக்குள்ள எதுக்கு காதல்? இன்னும் விஜய், அஜித், சூர்யா , ஆர்யா கூடலேல்லாம் நடிக்க வேண்டியிருக்கே! விஷாலுக்கு என்னை விட சூப்பாரா ஒரு கேர்ள் கிடைப்பா!(விஷால் லட்சுமிமேனன் கையைப் பிடித்து ‘தாங்க்ஸ்’ சொல்கிறார் விஷால்.) என்னைப் பார்த்து ஒரு ஹீரோவை கல்யாணம் பண்ணிக்குவீங்களான்னு கேட்டீங்களே, அவர் ஒரு நடிகையை கல்யாணம் பண்ணிக்குவாரான்னு கேளுங்க.

பதில் சொல்லுங்க விஷால்...

நான் மாட்டேன்ன்னு இதுவரைக்கும் சொன்னதே இல்லையே! நடிகையை கல்யாணம் செய்தால் என்ன தவறு? அவங்க மனுஷங்க இல்லையா என்ன?

உங்க வீட்லயே அப்பா, அண்ணன்னு ரெண்டு தயாரிப்பாளர்கள் இருக்காங்களே.. அப்புறம் எதுக்கு நீங்களும் தயாரிப்பாளர் ஆனீங்க?

இதே கேள்விய இண்ட்ஸ்ரியல பல பேர் என்னைப் பார்த்துக் கேட்டாங்க. எங்க அப்பா, அண்ணன் கிட்ட கற்றுக்கொண்டதிலிருந்து நான் ஆரம்பிக்கிறேன் என் சினிமா வாழ்க்கையை முதலில் உதவி இயக்குநராகத்தான் தொடங்கினேன். அப்புறம் கதாநாயகன், இப்போது தயாரிப்பாளர். நான் தயாரிப்பாளராக ஆனதுக்குக் காரணம் நான் கடைசியா கால்ஷீட் கொடுத்த சில தயாரிப்பாளர் கள்தான். 8 மாசம் கஷ்டப்பட்டு நடிக்கிறேன். ஆனால் படங்களை தாயாரிக்கிறவங்க வெவ்வேறு சிக்கல்கள்ல மாட்டிகிட்டு என் படத்தை முடக்கிடுறாங்க

அப்போதான் சரியான தயாரிப்பாளரை தேர்ந்தெடுக்கலேன்னா, என் படங்கள் வெளியாகாதுங்கிற உண்மையை உணர்ந்துகொண்டேன். தயாரிப்பாளர் ஆன பிறகு ஒரு அலாரம் கடிகாரத்தை விழுங்கியது போல உணர்றேன். காலையில் வழக்கமாக விழிக்கும் நேரத்தைவிட, ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு விழிப்பு வந்துவிடுகிறது. முதல்முறையா தீபாவளிக்கு விஷால் படம் ரீலீஸ் ஆகுது. நானே தயாரிப்பாளர்ங்கிறதால யாரும் தடுக்க முடியாது. என்னோட இடத்தை நானே காப்பாத்திக்குவேன்.

இந்தப் படத்துல உங்க அப்பாவா பாரதிராஜா நடிச்ருக்கிறதுல என்ன ஸ்பெஷல்?

இயக்குனர் இமயம் பாரதிராஜா ஒரு இயக்குனராக தமிழ் ரசிகர்களுக்கு ரொம்ப நெருக்கமானவர். ஆனால் ஒரு நடிகராக அவர் வெற்றிபெறவில்லைன்னு சொல்றவங்க இருக்காங்க. இந்தப் படம் வெளியான பிறகு பிஸியான நடிகராக பாரதிராஜா வெற்றிபெறுவார். தன்னோட தனி பாணியை அடியோடு தவிர்த்துவிட்டு இந்தப் படத்தில் ‘கல்யாணசுந்தரம்’ங்கிற என்ற 70 வயது அப்பா கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். சிவகுமார் என்ற கதாபாத்திரத்தில், எதற்கெடுத்தாலும் பயந்து சாகும் மதுரை இளைஞனாகவும், அவரது மகனாகவும் நான் நடித்திருக்கிறேன். இதுல நான் ஒரு ஹீரோன்னா, பாரதிராஜா இன்னொரு ஹீரோ. என் அப்பாவுக்கும், இந்த உலகத்துல இருக்கிற எல்லா அப்பாக்களுக்கும் இந்தப் படத்தை சமர்ப்பனம் பண்ண விரும்புறேன்.

பாண்டிய நாடு என்ன கதை?

இது ஒரு மிடில் க்ளாஸ் ரிவென்ஞ் டிராமா. அப்பாவுக்கும் மகனுக்கும் நடக்குற உணர்ச்சிப் போராட்டம்னு சொல்லலாம். வன்முறைன்னாலே பயந்து ஒதுங்கி வாழ்ற ஹீரோ. அவனுக்கு அதட்டிக் கூடப் பேசத் தெரியாது. அந்த அளவு பயந்த சுவாபம் கொண்டவன் அடிக்கக் கத்துகிறான்னு வச்சுக்கோங்க. அப்போ என்ன நடக்கும்ன்றதுதான் கதை. என்னோட முந்தைய படங்கள்ல இருந்த எந்த அடையாளமும் இதுல இருக்காது.

இயக்குனர் விஷாலை எப்போ எதிர்பார்க்கலாம்?

விரைவில். காரணம் நானே எல்லா விஷயத்தையும் இழுத்துப் போட்டுகிட்டு செய்யப் போறதில்லை. இந்த சிறுகதை நல்லா இருக்கு, அதை திரைக்கதையாக்கி படம் இயக்குன்னு பாலா சார் சொல்லலாம். உங்களுக்கு செட்டாகுற மாதிரி ப்ரெஷ்ஷா ஒரு கதை இருக்கு நீங்களே இயக்குங்கன்னு யாராவது கொடுக்கலாம். ஹாலிவுட் மாதிரி குறைந்தது ஒருவருஷம் ப்ரிபுரடக்ஷன், ப்ரிஷூட் பண்ணித்தான் என்னோட படத்தை இயக்கப் போறேன். அதுக்கான நாட்கள் பக்கத்துல வந்தாச்சு

ஆனால் கல்யாணம் மட்டும் பக்கத்துல வந்த மாதிரி தெரியலையே? (லட்சுமி மேனன் குறுக்கிட்டு )

நானும் கேட்டேன். ஆர்யாவுக்கு பெண் கிடைச்சாத்தான் இவர் கல்யாணம் பண்ணிக்குவாராம். ஆர்யா - விஷால் ரெண்டு பேருக்கும் ஒரே மேடையில் கல்யாணம் பண்ணி வெச்சுடலாம்ன்னு அவங்க அப்பா அம்மா பிளான் பன்றாங்கன்னு கேள்விப்பட்டேன். ஆனால் விஷாலுக்கு பெண் கிடைக்கணுமே!

இப்போது விஷால் குறுக்கிட்டு..

எனக்கு ஒரு பெண் கிடைச்சா கல்யாணம் ஒகே.. ஆனா ஆர்யாவுக்கு எத்தனை பெண் வேனும்னு அவனைத்தான் கேக்கணும். பெண்கள் மத்தியில ஒரு ரெண்டு மணிநேரம் இல்லேன்னு வச்சுக்கோங்க... ஆர்யாவுக்கு ஜுரம் வந்துடும். அதே மாதிரி பெண்களுக்கு அவனை அவ்வளவு பிடிக்குது சார். ரொம்ப க்யூட்டான மனசு அவனுக்கு. அவனை மாதிரி வாழ்க்கையை ரொம்ப கூலா எடுத்துகிற ஒரு ஆள் ஃபிரெண்டா கிடைச்சதுனாலதான் சீரியஸான சூழ்நிலைய சந்திச்சபோல்லாம் நான் தைரியமா தாண்டி வந்துருக்கேன். ஒரே ஒரு எக்ஸாம்பிள் கேளுங்க. சி.சி.எல். ஸ்டார் கிரிக்கெட் பைனல் மேச்... பிளேயர்ஸ் நேம் அறிவிக்கிறாங்க.. எல்லாரும் கிரவுன்ட் உள்ளே போயிட்டோம் ஆர்யாவை மட்டும் காணும். இவன் எங்கடா போனான்னு டென்ஷனோட தேடுறேன். பார்த்தா பெவிலியன்ல அவசர அவசரமா பிரியாணி சாப்பிட்டுகிட்டு இருக்கான். “கொஞ்சம் இரு மச்சி... ஸ்பைசியா சாப்பிட்டாதான் கிரிக்கெட்ல பெப் இருக்கும்”ங்கிறான். அந்த நேரத்துலதான் நான் அவனைப் பார்த்து பொறாமைப்பட்டேன். ஆர்யா மாதிரி கூலா இருந்தா 100 ஆயுசு. அவன்கிட்ட முதல்ல கத்துக்க வேண்டியது இதுதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

57 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்