சமுதாயக் கருத்துள்ள படங்களுக்கு வரி விலக்கு கண்டிப்பாக வேண்டும் என்று இயக்குநர் அறிவழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏஞ்சலின் டாவின்சி தயாரித்துள்ள 'நிசப்தம்' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின், மீரா கதிரவன், கிருத்திகா உதயநிதி, அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இயக்குநர் அறிவழகன் பேசியது, "இந்த படம் பார்த்தேன். ரொம்ப ஆழமான படம். சமூகத்திற்குத் தேவையான படம் என்று நினைக்கிறேன்.
இன்றைக்கு ஒரு தயாரிப்பாளரைப் பார்த்துக் கதை சொல்லப்போனால் இந்த படத்துக்கு யு சான்றிதழ் கிடைக்குமா இல்லை என்றால் யு/ஏ கிடைக்குமா? என்று தான் முதலில் கேட்கிறார்கள். படம் முடிந்து தணிக்கைக்குப் போய் யு சான்றிதழ் கொடுத்துவிட்டார்கள் என்றால் அங்கேயே படத்தின் வெற்றியை முடிவு செய்து விடுகிறார்கள்.
ஆனால் ரசிகர்கள் தான் ஒரு படத்தை வெற்றிப் பெறச் செய்கிறார்கள். இந்த தருணத்தில் நான் வைக்கிற வேண்டுகோள் என்னவென்றால், யு சான்றிதழ் அல்லது யு/ஏ சான்றிதழ் என்ன வேண்டுமானாலும் கொடுங்கள்.
'நிசப்தம்' மாதிரி சமூக விழிப்போடு சமுதாயத்துக்குத் தேவைப்படுகிற துணிச்சலான கதைகளுக்கு நிச்சயமாக யு சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அத்தோடு வரி விலக்கும் கொடுக்க வேண்டும்" என்று பேசினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago