என்.எஸ். கிருஷ்ணனின் மகன் கிட்டப்பா மரணம்

By செய்திப்பிரிவு

கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனின் மகன் என்.எஸ்.கே.கிட்டப்பா(72) சுவாசக் கோளாறு காரணமாக பெங்களூரில் சனிக்கிழமை காலமானார். அவருடைய உடல் பெங்களூரில் இன்று (திங்கள்கிழமை) தகனம் செய்யப்படுகிறது.

என்.எஸ்.கிருஷ்ணனின் மூத்த‌மகனான கிட்டப்பா மத்திய அரசு நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக டெல்லியில் பணியாற்றினார். கடந்த 2012-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வுப் பெற்ற கிட்டப்பா தனது மனைவி இந்திராவுடன் பெங்களூரில் வசித்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை காலை கிட்டப்பாவுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. அவரின் மனைவி இந்திரா மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். போக்குவரத்து நெரிசலால் மருத்துவமனை யிலிருந்து ஆம்புலன்ஸ் வருவ தற்கு அரைமணி நேரத்துக்கும் அதிகமாக தாமதமானதால் கிட்டப்பாவின் உயிர் பிரிந்தது.

என்.எஸ்.கே.கிட்டப்பா இறந்த தகவல் உடனடியாக அமெரிக்காவில் இருக்கும் அவரது மூத்தமகள் தேன் மொழிக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர் திங்கள்கிழமை பெங்களூர் வந்து விடுவார். அதன் பிறகு, கிட்டப்பாவின் இறுதிச் சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

என்.எஸ்.கிருஷ்ணன் நடித்து 1949-ம் ஆண்டு வெளியான 'நல்லதம்பி' திரைப்படத்தில் மட்டும் என்.எஸ்.கே.கிட்டப்பா நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்திற்கு அண்ணா கதை வசனம் எழுதியது குறிப்பிடத்தக்கது.​​

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்