கன்னட படமான 'லுசியா' படத்தின் தமிழ் ரீமேக்கின் நாயகனாக சித்தார்த் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
50 லட்சம் ரூபாய் செலவில், பவன் குமார் இயக்கிய படம் 'லுசியா'. சின்ன நடிகர்களை வைத்து இயக்கி வெளிவந்த இப்படம் ரசிகர்களையும் விமர்சகர்களையும் திருப்திப்படுத்தியது. இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது.
இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் இப்படத்தினை பிரத்யேகமாக திரையிட்டுப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், இந்தியில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பது புதிராக இருக்கிறது.
இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையை சி.வி.குமார் வாங்கினார். தமிழ், தெலுங்கு இரண்டிலும் தெரிந்த நாயகர் ஒருவர் இருந்தால், நடிக்க வைத்து இரண்டு மொழியிலும் வெளியிட்டு விடலாம் என்பது அவரது எண்ணம்,
தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பரிச்சியமான சித்தார்த் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரசாத் குமார் என்ற புதுமுக இயக்குநர் இயக்கவிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார்.
இப்படம் குறித்து சித்தார்த் தனது ட்விட்டர் வலைத்தளத்தில், "எனது அடுத்த படம் ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. 'லுசியா' படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன்.
'லுசியா' படத்தினை நான் பார்த்த போது, என்னை மிகவும் பாதித்தது. அப்படத்தினை இயக்கிய பவன் குமார் சிறப்பாக இயக்கி இருந்தார். " என்று தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago