தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு விஷால் போட்டி: முன்மொழிந்து கமல் கையெழுத்து

By ஸ்கிரீனன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடவுள்ளார். விஷாலை முன்மொழிந்து கமல் கையெழுத்திட்டார்.

மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடவுள்ளார். இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது மனுத்தாக்கல் செய்யவுள்ளார். விஷாலுடைய மனுவில் முன்மொழிந்து கையொப்பமிட்டுள்ளார் கமல். வழிமொழிந்து கையொப்பமிட்டுள்ளார் ஐசரி கணேஷ்.

இதனால் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இவருடைய அணியில் பொருளாளராக குஷ்புவும், செயலாளராக ஞானவேல்ராஜாவும் போட்டியிடவுள்ளனர்.

முன்னதாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்து வார இதழ் மற்றும் தொலைக்காட்சிக்கு நடிகர் விஷால் பேட்டியளித்தார். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கடந்த 2016 நவம்பர் 14-ம் தேதி அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி கே.கல்யாணசுந்தரம், விஷாலின் இடை நீக்கத்தை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஷால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் மார்ச் 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் பிப்.4-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே இடைநீக்கத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று (வியாழக்கிழமை) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘தனிப்பட்ட முறையில் விஷால் யாரையும் விமர்சிக்கவில்லை. அவரது பேச்சு யாருக்காவது வேதனையை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்தும் மனுத் தாக்கல் செய்துள்ளார்’’ என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘அரசியலமைப்பு சட்டத்தின்படி கருத்து சுதந்திரமும், பேச்சுரிமையும் அனைவருக்கும் உள்ளது. அதில் யாரும் தலை யிட்டு யாரையும் தடுக்க உரிமை யில்லை. மனுதாரர் பேசியது பொதுவான விஷயம்தான். அவர் பஞ்சாயத்து என்று தான் கூறியுள்ளார். பஞ்சாயத்துக் கும், கட்டப்பஞ்சாயத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இது ஒரு சாதாரண விஷயம். இதற்காக இடைநீக்கம் என்பது சரியான முடிவாக இருக்காது.

இது தொடர்பாக நீங்களே சுமுகமான முடிவை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நாங்கள் உத்தரவிடுகிறோம். அந்த முடிவை 3-ம் தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு தெரிவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 3) காலை கூடிய தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில், விஷாலை மீண்டும் உறுப்பினராகச் சேர்த்து கொண்டனர். இப்பிரச்சினை முடிவு பெற்றதைத் தொடர்ந்து உடனடியாக தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார் விஷால்.

ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் விஷால் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்