லிங்குசாமியின் இயக்கத்தில் ‘அஞ்சான்’ திரைப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு மும்பை யில் முடிந்துள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா.
நடன இயக்குநர் ராஜூசுந்தரம் நடனத்தில் மூன்று பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் ராஜூசுந்தரம், சென்னை யிலிருந்து மும்பைக்கு தன் குழுவினரோடு சென்று, சூர்யா, சமந்தா நடிக்கும் ஒரு பாடல் காட்சிக்கு நடனம் அமைத்தி ருக்கிறார். அப்போது பாலிவுட் திரைத் துறையைச் சேர்ந்த நடனக்குழுவினர் சிலர் கூட்டமாக வந்து படப்பிடிப்பை நிறுத்தும்படி கூறி, சண்டை போட்டுள்ளனர். இதனால் சில மணி நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. மும்பையைச் சேர்ந்த நடனக் கலைஞர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தாதற்காகத்தான் அவர்கள் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பின்னர், நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு ‘அஞ்சான்’ திரைப்படக்குழுவின் சார்பில் அபராதம் செலுத்தி விட்டு, படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பி யிருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago