விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் கதை என்ன?

By ஸ்கிரீனன்

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள படத்திற்கு தோட்டா ராய் செளத்ரி வில்லனாக நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது.

விஜய் 'ஜில்லா' படத்தினைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கி நடைபெற்றது. சமந்தா நாயகியாக நடிக்க இருக்கிறார். வில்லனாக யார் நடிக்கவிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் பெங்காலி நடிகர் தோட்டா ராய் செளத்ரி வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தில் தோட்டா வெளிநாட்டு தாதாவாக நடித்து வருகிறார்.

கதைப்படி, இவரை பிடிப்பதற்காக கொல்கத்தா போலீஸ், விஜய்யின் உதவியை நாடுகிறது. விஜய்யின் உதவியால் தாதாவை பிடித்து ஜெயிலில் அடைக்கிறார்கள்.

ஜெயிலில் இருந்து தப்பிக்கும் வில்லன், விஜய்யை கொலை செய்யத் தேடுகிறான். அப்போது தான் விஜய் தோற்றத்தில் இருவர் இருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது. இறுதியில் என்னவாகிறது என்பது தான் படத்தின் கதை.

இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். நாளை முதல் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஜெயில் காட்சிகள் அனைத்தையும் ராஜமுந்திரியில் படமாக்க இருக்கிறார்கள். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்