மார்ச் 21ம் தேதி முதல் குக்கூ

By ஸ்கிரீனன்

ராஜுமுருகன் இயக்கத்தில் தினேஷ், மாளவிகா நடித்திருக்கும் 'குக்கூ' படம் மார்ச் 21ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.

'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் அடுத்து தயாரித்திருக்கும் படம் 'குக்கூ'. 'அட்டகத்தி' தினேஷ், மாளவிகா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தினை ராஜுமுருகன் இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் இசையை பிப்ரவரி 18ம் தேதி கமல்ஹாசன் வெளியிட்டார். இப்படத்தின் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

'ராஜா ராணி' படத்தினைப் போலவே, இசை வெளியீடு அன்று இரவு 7 மணிக்கு அனைத்து தமிழ் தொலைக்காட்சியிலும் படத்தின் டிரெய்லர் ஒளிபரப்பட்டது. இசை மற்றும் டிரெய்லர் மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தற்போது, 'குக்கூ' திரைப்படம் மார்ச் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளிடையே மலரும் காதலை மையப்படுத்தி 'குக்கூ' திரைப்படத்தினை இயக்கியிருக்கிறார் ராஜுமுருகன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்