எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்: உருவானது புதிய கூட்டணி

By ஸ்கிரீனன்

'சரவணன் இருக்க பயமேன்' படத்தைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்

வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'செம' பட வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. அதனைத் தொடர்ந்து 'அடங்காதே', 'ஐங்கரன்', '4ஜி' உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

தற்போது நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இவரோடு பார்த்திபன், பாலக், பூனம் பாஜ்வா, எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். தெலுங்கில் பெரும் வரவேற்பு பெற்ற 'Ekkadiki Pothavu Chinnavada' படத்தின் தமிழ் ரீமேக்காகும். இதனை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'சரவணன் இருக்க பயமேன்' படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாகியுள்ளார் எழில். அதனைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.

தற்போது இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE