இதுதான் நான் 32: அந்த முகம்!

By பிரபுதேவா

‘இந்து’ படம் சூப்பர் ஹிட் ஆனதும் படத்தில் வொர்க் பண்ண எல்லாருக் கும் ரொம்ப சந்தோ ஷம். எனக்கு மட்டும் ‘எப்படியோ தப்பிச்சோம்டா சாமி'ன்னுதான் தோணுச்சு. ஏன்னா, ஒவ்வொரு தடவையும் நிறைய டேக் எடுத்துக்கிட்டு நடிச்சதனால ரிசல்ட் என்னா குமோ? ஏதாகுமோன்னு உள்ளுக்குள்ள அப்படி ஒரு பயம் இருந்துச்சு. பாட்டு, டான்ஸோட சேர்ந்து படமும் நல்லா பேசப்பட்டதனால, எனக்கு ஹீரோன்னு ஒரு புதுமுகம் கிடைச்சுது. டான்ஸ் மட்டும்தான்னு இருந்த எனக்கு அந்த முகம் என் வாழ்க்கையையே வேற மாதிரி மாத்துச்சு.

‘இந்து’ படத்தில் இருந்து இன்னைக்கு நடிச்சிட்டிருக்கும் ‘தேவி’படம் வரைக்கும் நான் ‘புதுசு'ன்னுதான் நினைக்கிறேன். ஏன்னா, நான் முதன்முதலா மாஸ்டரா தமிழ்ல செஞ்சேன். அப்புறம்,தெலுங் குல செஞ்சேன். அடுத்ததா ஹிந்தி யில செஞ்சேன். அதே போல, முதன் முதலா தமிழ்லதான் நடிச்சேன்.அப்புறம் தெலுங்குல நடிச்சேன். இப்போ ரீசண்டா ஹிந்தியில நடிச்சேன். அப்புறம்தெலுங் குல இயக்குநரானேன். அடுத்து தமிழ்ல. அதுக்கு அடுத்து ஹிந்தியில. இப்படி எந்த மொழியில போறப்பவும் என்னை சந்திக்கிற பத்திரிகை யாளருங்க, ‘‘சார்... முதன் முதலா இங்கே பண்றீங்க? இந்த அனுபவம் எப்படி இருக்கு?’’ன்னு கேட்பாங்க. அப்போதான் ‘ஆமாம்ல, நாம இவ்வளவு வருஷமா புதுமுகமா அறிமுகமா கிட்டே இருக்கோம்'னு தோணுச்சு. இப்போ ரீசண்டா ‘தேவி’படம் பண்றப்ப, ‘‘இவ்வளவு வருஷம் கழிச்சு தமிழ்ல நடிக்க வர்றீங்களே, எப்படி இருக்கு?’’ன்னு கேட்டாங்க. திரும்பப் புதுசா நடிக் கிறோம்லன்னு தோணுச்சு. அதே மாதிரி ‘தேவி’பட ஷூட்டிங்ல கூட டைரக்டர் உட்பட எல்லார்ட்டயும் நல்ல பேர் வாங்கணும்னு வாயை மூடிட்டு அவங்க சொன்னதை செஞ்சேன்.

ஹீரோ ஆன பிறகு, டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ண கூப்பிடுறவங்க குறைஞ்சி ட்டாங்க. அதனால டான்ஸ் மாஸ்டர் வேலையை நான் ரொம்ப மிஸ் பண்ணேன். ஏன், இன்னமும் மிஸ் பண்றேன். ஹீரோங்கிறது தனியா ஒரு கட்சி ஆரம்பிச்ச மாதிரி. டான்ஸ் மாஸ்டர்னா நிறைய தயாரிப்பாளர், நடிகர்கள், டெக்னீஷியன்கள்னு பல பேர்கிட்ட வேலை பார்க்கிற சூழல் அமையும். அது எந்தக் கட்சியும் சார்பில்லாத பொதுவான ஆள் மாதிரியான விஷயம்.

‘இந்து’ படம் நல்லாப் போச்சு. ஒரு வேளை வெற்றிபெறலைன்னா என் வாழ்க்கையில நான் எப்படி ஆகியிருப் பேன்னு தெரியலை. நான் ஹீரோ ஆகிட்டேன்னு ஒரு நாள்கூட மனசுல அதை நிறுத்திக்கிட்டதே இல்லை. ‘இந்து’ படத்தில் நடிச்சப்ப கூட ‘ஏதோ நம்மல பிடிச்சு கொண்டுவந்து போட்டுட் டாங்க’ன்னுதான் இருந்தேன். ஆனா, படம் ரிலீஸ் ஆன அப்புறம் இன்னொரு மடங்கு வேலையும் அதிகமாச்சு. பொறுப் பும் அதிகமாச்சு. ‘கிளிக்’கும் ஆச்சு. அடுத்தடுத்து படங்கள் நடிச்சேன். நான் ஓரளவுக்கு நடிக்கிற நடிகன்னு காட்ட நாலு, அஞ்சு படங்கள் ஆனதுன்னே சொல்லலாம்.

இன்னைக்கு வரைக்கும் என் கேரியர்ல நடக்குற எல்லாமும் கடவுள் கொடுத்ததுன்னுதான் சொல்வேன். எப்படி கடவுள் புண்ணியத்துல, எனக்கே தெரியாம, நான் ஹீரோவா ஆனேனோ, அந்த மாதிரிதான் இயக்குநர் ஆனதும். அதை பத்தி அப்புறம் சொல்றேன்.

‘இந்து’படம் பண்ணும்போதெல்லாம் என்னோட டான்ஸ்ல பயங்கர வேகம் இருக்கும். இப்போவெல்லாம் எனக்கே தெரியாம அந்த வேகத்தோடு சேர்ந்து ஸ்டைலும் மிக்ஸ் ஆகுது. அந்த வித்தியாசத்தால டான்ஸ்ல நல்ல டிஃபரெண்ட் தெரியுது. எல்லாத்துக்குமே இவ்வளவு வருஷத்தோடு உழைப்பு, மக்களோட அன்புதான் காரணம்.

ஒரு பொது இடத்துக்கு போகும் போது, ‘‘உங்க டான்ஸை பார்த்தேன். என்னமா ஆடுறீங்க சார்!’’ன்னு சொல் வாங்க. அதை கேட்கும்றப்ப ‘ஓ.. அப்படியா! நான் இன்னும் நல்லாதான் ஆடிட்டிருக்கேனா'ன்னு தோணும். அதே மாதிரி, பொதுவா வெளியில போறப்ப, ‘‘சார் எப்படி இருக்கீங்கன்னு?’’தானே கேட்பாங்க. நாலு, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என்னை பார்க்குறவங்க எல் லாம் முதல்ல கேட்குற கேள்வியே ‘‘சார் என்ன கொஞ்சம் குண்டாயிட்டீங்க?’’ன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. ‘ஆஹா… சரியில் லையே'ன்னு கஷ்டப்பட்டு ஒல்லியாக யிட்டேன். இப்போ பார்க்குறவங்க, ‘‘இன் னும் ஸ்லிம்மா அப்படியே இருக்கீங்களே சார்!’’ன்னு கேட்குறாங்க. நான் இப்படி இருக்குறதுக்குக் காரணமும் அவங்க கேள்விதான். இருந்தாலும் என் னால ஸ்வீட், சாக்லேட், ஐஸ்கிரீம் இதெல்லாம் சாப்பிடாம இருக்க முடியறதே இல்லை. ஆனா, மத்த சாப்பாடு விஷயத்துல கண்ட்ரோல் பண்ணிக்கிறேன்.

ஒரு தடவை ஹைதராபாத் ஹோட் டல்ல ரூம் சாவி வாங்க ரிசப்ஷனுக்குப் போனேன். அப்போ ஒரு 65 வயது பெரிய வரும், அவரோட மனைவியும் என்னைப் பார்த்து சிரிச்சிட்டே கிட்டே வந்து, ‘‘தம்பி’’ன்னு என்னைக் கூப்பிட்டாங்க. ‘‘என்னங்க?’’ன்னு கேட்டேன். அதுக்கு அந்தப் பெரியவர், ‘‘தம்பி, அப்படி ஆடுறீங்களே… உங்களுக்கு எலும்பு இருக்கா, இல்லையா?’’ன்னு என் மனைவிக்கு ரொம்ப நாள் சந்தேகம். உங்களை ஒரே ஒரு தடவை தொட்டுப் பார்க்கலாமான்னு கேக்குறாங்க’’ன்னார். நானும் கையை நீட்டினேன். தொட்டுப் பார்த்துட்டு, ‘‘எலும்பு இருக்கே. ஆனா, அப்படி ஆடுறீங்களே?’’ன்னு கேட்டாங்க. நானும் என்ன சொல்றதுன்னே தெரியாம, சிரிச்சிட்டே ‘தெரியலையேங்க'ன்னு சொன்னேன். இப்படி பலமுறை நடந்துருக்கு. அதனாலதான் நான் இப்படி ஆடுறதுக்கு காரணம்… மக் களோட அன்புன்னும் சொல்றேன்.

டான்ஸ் மாஸ்டரா வேலை பார்க் குறப்ப கொஞ்ச பேருக்குத்தான் தெரிஞ்சேன். அதுக்கு அடுத்து சோலோ டான்ஸ் ஆடினேன். இன்னும் நிறையப் பேருக்கு தெரிஞ்சேன். அதுவே ஹீரோ ஆன பிறகு இன்னும் மக்கள்கிட்ட போய்ச் சேர்ந்தேன்.

மாஸ்டரா ஆடிட்டிருக்குறப்ப ஆழ்வார்பேட்டையில எங்க வீட்டுக்கு முன்னால இருக்கிற நாரத கான சபாவுக்குப் போய், நண்பர்கள்கூட சேர்ந்து ஹோட்டல்ல சாப்பிடுவேன். ரோட்டுல விளையாடுவேன். அதைப் பார்த்துட்டு எல்லாரும் சிரிச்சிட்டே போவாங்க. அதுவே, ஹீரோ ஆனதும் என்னைப் பார்த்துட்டா வண்டிய நிறுத்திட்டு வந்து பேச ஆரம்பிச்சாங்க. அது எனக்கு அப்போ புதுசாதான் இருந்துச்சு. ஹோட்டலுக்குப் போய் வர்றப்ப அங்க சில ஃபிரெண்ட்ஸுங் களும் கிடைச்சாங்க. நாங்க அதே இடத்துல தொடர்ந்து மீட் பண்ண வும் ஆரம்பிச்சோம். நாம ஹீரோவா கிட்டோம், இனிமே தனித்து இருப் போமேன்னு ஒருநாளும் தோணினதே இல்லை. ஹீரோ ஆனதும் மக்கள்ட்ட இன்னும் நெருக்கமாப் பேசறதுக்கு ஒரு வாய்ப்பு அமையுதுன்னுதான் எனக்கு தோணுச்சு. இப்பவும் கொஞ்ச டைம் கிடைச்சாலும் என் ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ்கூட செலவிடப் போய்டு வேன். என்னோட சூழலும், என்னோட ஃபிரெண்ட்ஸும், என்கூட பழகுறவங் களும்தான் நான் ஹீரோங்கிறதை தலைக்குக் கொண்டுபோகலைன்னு நினைக்கிறேன். ஒரு டாக்டர், இன்ஜினீயர், வக்கீல் வேலை மாதிரி… எனக்கு ஹீரோ வேலை கொடுத்திருக்காங்க. அதை நாம செய்றோம். அப்படித்தான் இதை எடுத்துக்கிறேன்!

நான் நடிக்கிற படத்தோட இயக்குநர், ஹீரோயின், டெக்னீஷியன்களோட பழகுறப்ப அவங்க என்னை ஆரம்பத்துல ஒரு டான்ஸ் அசிஸ்டெண்ட், மாஸ்டர்னு எப்படி பார்த்திருப்பாங்களோ, அதே மாதிரிதான் அவங்களோட நான் பழகு வேன்.

இப்படி டான்ஸ் மாஸ்டரா டிராவல் பண்ணிட்டிருக்குறப்ப ஃபாலோ பண்ணிக்கிட்டிருந்ததுல இருந்து பெருசா எதையுமே மாத்திக்காத நான், ஹீரோவானதும் சேஞ்ச் பண்ணிட்ட ஒரே விஷயம் என்னன்னு, அடுத்த வாரம் சொல்றேன்.

- இன்னும் சொல்வேன்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்