விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'கோலி சோடா' படத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது.
'பசங்க' படத்தில் நடித்த ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி, சீதா மற்றும் பலர் நடிக்க, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான படம் 'கோலி சோடா'. 24ம் தேதி இப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது.
விமர்சகர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இன்று முதல் 40 திரையரங்குகள் அதிகப்படுத்த இருக்கிறார்கள். இதனால் சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு.
விநியோகஸ்தர்கள் மத்தியில் இப்படம் குறித்து கேட்ட போது, "கண்டிப்பாக விநியோகஸ்தர்களுக்கு 2014ம் ஆண்டின் முதல் லாபம் சம்பாதித்து கொடுக்கப் போகும் படமாக 'கோலி சோடா' அமைய இருக்கிறது. ஏனென்றால் படத்தின் பட்ஜெட் கம்மி என்பதால் படத்தினை குறைந்த விலைக்கு வாங்கினோம். மக்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் கண்டிப்பாக மிகப்பெரிய லாபமிருக்கும்" என்றார்கள்.
இப்படத்தினைத் தொடர்ந்து விஜய் மில்டன், சுசீந்திரன் இயக்கி வரும் 'வீரதீர சூரன்' படத்திற்கும், பாலாஜி சக்திவேல் இயக்கவிருக்கும் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago