யூ-டியூப் தளத்தில் வெளியான ஆரண்ய காண்டம்

By ஸ்கிரீனன்

விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஆரண்ய காண்டம்' படத்தினை இன்று யூ-டியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஜாக்கி ஷெரஃப், ரவி கிருஷ்ணா, சம்பத், யாஷ்மின், சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிக்க, தியாகராஜன் குமாரராஜா இயக்கிய படம் 'ஆரண்ய காண்டம்'. எஸ்.பி.சரண் தயாரிக்க, யுவன் இசையமைத்து இருந்தார்.

சென்சார் பிரச்சினையால் தமிழ்நாட்டில் 'ஆரண்ய காண்டம்' படம் வெளியாக தாமதமானது. ஆனால், பல்வேறு திரைப்பட விழாக்களில் இப்படம் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றது. இந்திய அளவில் சிறந்த எடிட்டிங், சிறந்த முதல் பட இயக்குநர் ஆகிய தேசிய விருதுகளையும் இப்படம் வென்றது.

தமிழ்நாட்டில் வெளியான போது, விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், வசூல் ரீதியாக இப்படம் வெற்றி அடையவில்லை.

நீண்ட நாட்களாக யாருமே வாங்காத டி.வி உரிமையை, விஜய் டி.வி வாங்கியது. ஒரே ஒரு நாள் ஒளிபரப்போடு நிறுத்திக் கொண்டது. அதனைத் தொடர்ந்து விஜய் டி.வி நிறுவனத்தின் யூ.டியூப் தளத்தில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்ப்பு உண்டானது. ஆனால், விஜய் டி.வி நிறுவனம் இப்படத்தினை பதிவேற்றம் செய்யவில்லை.

இன்று, தனது யூ.டியூப் தளத்தில் 'ஆரண்ய காண்டம்' படத்தினை பதிவேற்றம் செய்திருக்கிறது விஜய் டி.வி. இச்செய்தியால், பலரும் அப்படத்தின் லிங்க்கை தங்களது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்