சுசித்ராவின் தொடர் ட்வீட்கள்: சமூக வலைதளத்தில் எழுந்துள்ள சர்ச்சை

By ஸ்கிரீனன்

பாடகி சுசித்ராவின் தொடர் ட்வீட்களால் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

பிரபல பின்னணி பாடகியாக வலம் வருபவர் சுசித்ரா. 'ஆயுத எழுத்து' உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்திலும் நடித்துள்ளார். தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து வருபவர்.

பிப்ரவரி 20-ம் தேதி ட்விட்டர் பக்கத்தில் தனது காயம்பட்ட கையின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "இது தனுஷின் குழுவின் மோசமான கையாளால் ஆன காயம். மன்னித்துவிடுங்கள். நீங்கள் தகுதி இழந்துவிட்டீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "இது சுச்சிதான், நான் மீண்டும் வந்துவிட்டேன். பாதுகாப்பாக உள்ளேன். தனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டைப் பற்றி அனைவரிடமும் கூற தயாராக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சில ட்வீட்டுக்களில், தனுஷ் நீங்கள் கடவுள். உங்கள் காலைக் காட்டுங்கள் என்றும், தனுஷ் என்னிடமிருந்து தள்ளி இருங்கள் என்றும் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் யாரேனும் ஊடுருவிட்டார்கள் என பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தனது செல்ஃபி படம் ஒன்றை பதிவேற்றி, அந்த ட்வீட்டுகளை நான் தான் பகிர்ந்தேன் என்று உறுதிசெய்துள்ளார். தனுஷ் மற்றும் சிம்பு இருவரைப் பற்றியும் தெரிவித்ததால், பலரும் இருவரையும் கேலி செய்து தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும், இதைப் பற்றி கருத்துக் கேட்க சுசித்ராவைத் தொடர்பு கொண்ட போது அவருடைய எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்ட போது, "இதைப் பற்றி நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்கள்.

சுசித்ராவின் கருத்துகளுக்கு, அவரே விளக்கமளிக்காத வரை இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்