இதுதான் நான் 31: முதல் ஹீரோ... முதல் டயலாக்!

By பிரபுதேவா

‘இந்து’ படத்தோட முதல் நாள் ஷூட்டிங். ஹீரோவா எனக்கு முதல் படம். டிரெஸ் கொடுத் தாங்க, போட்டுக்கிட்டேன். அசிஸ் டெண்ட் வந்தார், சீன் பேப்பரைக் கொடுத் தார். அதில் ‘‘இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் எல்லா நாடுகளிலும் பிரசித்திப் பெற்றது’’ன்னு எழுதியிருந்தது. இதுதான் நான் பேசிய முதல் டயலாக். அந்த டயலாக் மாதிரியே நானும் எல்லா இடத்திலேயும் ஃபேமஸ் ஆனேன். காட் கிஃப்ட்!

இயக்குநர் பவித்ரன் சார் என்னை ஹீரோவா வைத்து படம் பண்ண ணும்னு முன்னாடியே முடிவுபண்ணி யிருப்பார்னுதான் நினைக்கிறேன். அப்பா விடம் பவித்ரன் சார் கேட்டிருக் கார். சந்தோஷமா அவரும் ஓ.கே சொல்லி யிருக்கார். அப்புறம்தான் இது எனக்குத் தெரிஞ்சுது. அதுவும் படத்தோட கதை, எதுவுமே எனக்குத் தெரியாது. அப்போ எனக்கு பத்தொன்பது, இருபது வயசிருக்கும்.

படத்தில் சின்ன டயலாக்னாலே எனக்கு கஷ்டம். அதுவும் நாலு, அஞ்சு வரிகள்னா அவ்வளவுதான். எப்படியும் பத்து டேக்காவது போகும். எப்படி நிக் கணும்? கையை எங்கே வைக்கணும்? ரியாக்‌ஷன் என்ன தரணும்னு எதுவுமே தெரியாது. ஒவ்வொரு ஷாட் முடியும் போதும், எனக்கு எக்ஸாம் முடியுற மாதிரி இருக்கும். ரொம்ப கஷ்டமா இருந் துச்சு. பேசாம ஆடிட்டே இருந்திருக் கலாமே, அது எவ்வளவு ஜாலியா இருந்துச்சுன்னு தோணும். அதே மாதிரிதான் டப்பிங். இப்போ ஒண்ணு, ரெண்டு நாட்கள்ல மொத்த படத்தோட டப்பிங்கையும் முடிச்சிடுறேன். அப்போ 25 நாட்கள் ஆச்சு. ஒவ்வொரு டேக்கும் 20-ல இருந்து 30 - டேக் வரைக்கும் போகும். நைட் தூங்குறப்பவும் ஒரே ஃபிரேம் திரும்பத் திரும்ப வந்துட்டே இருக்கும். தூங்கவே முடியாது. ஆனா, நான் எவ்வளவு டேக் எடுத்தாலும் பவித்ரன் சார் ரொம்ப பொறுமையா இருந் தார். பெருசா, என்னை கண்டிக்கவே இல்லை. அப்புறமா, படங்கள் பண்ணப் பண்ண கொஞ்சம் இம்ப்ரூவ் ஆனேன். அதுவும் கொஞ்ச வருஷம் கழிச்சு என் நடிப்பை டைரக்டர் மகேந்திரன் சார் பாராட்டினது சின்ன பையனுக்கு 10 ஐஸ்கிரீம், 10 சாக்லேட் கொடுத்தா எப்படி இருக்கும்? அப்படி இருந்தது.

‘இந்து’ படம் பண்றப்ப 80 நாட்கள் ஷூட்டிங் நடந்ததுன்னு சொன்னா, அதில் 75 நாட்கள் எனக்கு ரத்தம் வந்திருக்கும். தினமும் அடிபடும். நானே எங்காவது இடிச்சிப்பேன். இல்லைன்னா, சுத்தி யிருக்குற மத்தவங்கள்ல யாராவது ஒருத்தர் இடிச்சிடுவாங்க. ஆனா, சின்னச் சின்ன காயம்தான். ‘இந்து’, ‘காதலன்’ன்னு அடுத்தடுத்து நான் நடிச்ச மூணு, நாலு படங்கள்ல இப்படி ஆகியிருக்கு.

ஒருமுறை ஒரு ஃபைட்டர்கூட சண்டை போடுறப்ப, முகத்துல டம்முன்னு ஒரு இடி விழுந்துச்சு. அடுத்து கொஞ்ச நேரத்துல கன்னத்துல ஜில்லுன்னு இருந் துச்சு. என்னன்னு தொட்டுப் பார்த்தா, கண்ணுக்கு மேல புருவத்துல அடிப்பட்டு ரத்தம் வடியுது. உடனே ஓடிப்போய் தையல் போட்டுட்டு திரும்பவும் ஷூட்டிங் வந்துட்டேன். இப்போகூட என் லெஃப்ட் புருவத்துல அந்த மார்க் இருக்கு. ‘இந்து’ மார்க்!

‘யப்பா ஞானம்… சீதாவ காணோம்’ பாட்டுக்கு ஒரு லாரியோட டாப்லேர்ந்து கீழே ஜம்ப் பண்ணி ஆடியிருப்பேன். ‘இளம் கன்று பயம் அறியாது’ன்னு சொல்ற மாதிரி, செஞ்ச வேலை அது. அதெல்லாம் இன்னைக்கு பார்க்குறப்ப ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. ‘என்ன அவ் வளவு மேலேர்ந்து குதிச்சிருக்கேன்… நல்லவேளை அடிபடலை!’ன்னு தோணும்.

அந்தப் படத்தில் ஹீரோயின் ரோஜா. பெரிய ஹீரோயின். தேவா சார் மியூஸிக். அந்த சமயத்தில்தான் ‘கானா’ பாட்டுகள் பிரபலமானது. இந்தப் படம் அதுக்கு பெரிய முன்னுதாரணம். அதே மாதிரி பெரிய கேமராமேன், அசோக்குமார் சார். சரத்குமார் சார் கெஸ்ட் ரோல் பண்ணியிருந்தார். குஷ்பு மேடம் ஒரு பாட்டுக்கு ஆடியிருப்பாங்க. நான் மட்டும்தான் அதில் புதுப் பையன்.

‘மெட்ரோ சேனல் முன்னப் பாரு…’ பாட்டு ஷூட்டிங். பாட்டுல ஒரு பிஜிஎம் வரும். முதல்ல அதுக்கு டான்ஸ் அசிஸ் டெண்ட் ஆடினார். அவரோட ஆட்டத் துக்கு எல்லாரும் கிளாப்ஸ் அடிச்சாங்க. ‘ஆஹா.. என்ன இவரு இப்படி ஆடிட் டாரு! இனி… நம்ம வேற ஆடணுமே’’ன்னு பயம் இருந்துச்சு. பக்கத்தில் வந்து நின்னார். ‘‘பின்னிட்டியேப்பா…’’ன்னு சொன்னேன். அவர் சிரிச்சிட்டே, ‘‘ஆமாம் சார். நீங்க போங்க… பண்ணுங்க’’ன்னு ஜாலியா சொன்னார். நானும் ஆடிட்டேன். நல்லவேளை ஒரே டேக்ல முடிஞ்சுது. ‘அப்பாடா! ஒழுங்கா ஆடிட்டோம்!’னு இருந்தது. அந்த அசிஸ்டெண்ட் பக்கத் தில் வந்து நின்னார். ‘‘ஓ.கே-வா?’’ன்னு கேட்டேன். என்னை மேல, கீழே பார்த் தார். ரெண்டு பேரும் சிரிச்சிட்டோம். எப்ப வுமே இந்த டான்ஸ் அசிஸ்டென்ஸுங்க நான் ஆடுறேன்னா, என்னைவிட ரெண்டு மடங்கு அதிகம் ஆடுவாங்க. அதுவே எனக்கு பயமா இருக்கும்.

படத்தில் நடிச்சிட்டிருக்குறப்ப இடை யில ரெண்டு, மூணு படங்கள்ல மாஸ் டரா அப்பப்போ போய் வேலை பார்த் துட்டு வருவேன். மாஸ்டரா இருந்துட்டு, ஹீரோவா ஆகுறது மிகப்பெரிய கஷ்ட மான வேலைன்னு நினைச்சிட்டிருந்த காலகட்டம் அது. நடிகரா இருக்குறப்ப ஒரு சீன் முடிச்சுட்டு, அடுத்த சீன் வர வரைக்கும் பொறுமையா உட்கார்ந்திருக் கணும். ஆனா, மாஸ்டரா வேலை பார்க்கும்போது ஒரு பாட்டை முடிக்கிற வரைக்கும் பரபரப்பாவே இருப்பேன். நான் பின்னாடி இயக்குநரானதுக்கும்கூட இதுவும் ஒரு காரணம்.

ஆரம்பத்தில் ‘பொள்ளாச்சி சந்தையிலே’ன்னு படத்துக்கு பேர் வெச்சிருந்தாங்க. பின்னாடிதான் ‘இந்து’ன்னு மாத்தினாங்க. நல்ல தலைப்பு. என்னோட முதல் படத்தோட தலைப்பே பெண் கதாபாத்திரத்தோட தலைப்பு. அப்புறம் ‘பெண்ணின் மனதைத் தொட்டு’ன்னு ஒரு படம் பண்ணேன். அதிலேயும் எல்லாமே நல்லதா அமைஞ்சுது. இப்போ நடிச்சிக்கிட்டிருக்குற ‘தேவி’யும் பெண்ணோட தலைப்புதான். இப்படி பெண் தலைப்பு எல்லாமே எனக்கு லக்கியா அமைஞ்சிருக்கு.

‘இந்து’ படம் ரிலீஸாச்சு. சூப்பரா போய்ட்டிருக்குன்னு சொன்னாங்க. எனக்கு முதல் படம். ஒரு முதல் பட ஹீரோவுக்கு அது எவ்வளவு பெரிய சந்தோஷத்தை தரும்! ஆனா, எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுங்களா?

- இன்னும் சொல்வேன்...

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்