சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!

By செய்திப்பிரிவு

நடிகர் சந்தானம் அடுத்து நாயகனாக நடிக்கும் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

காமெடியனாக மட்டுமே நடித்துவந்த சந்தானம், நாயகனாக நடித்து தயாரித்த படம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'. நாயகனாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டதால் பல இயக்குனர்கள் அவருக்காக கதை தயார் செய்துவந்தார்கள்.

சந்தானமோ நாயகனாக அடுத்து நடிக்கவிருக்கும் படமும் வரவேற்பு பெறவேண்டும் என்று முடிவுசெய்துவிட்டார். படத்திற்கு 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்று தலைப்பிட்டிருக்கிறார்.

தெலுங்கில் ராஜமெளலி இயக்கத்தில் மாபெரும் வரவேற்புபெற்ற 'மரியாத ராமண்ணா' படத்தின் ரீமேக்தான் இது. இந்தியிலும் 'SON OF SARDAR' பெயரில் இப்படம் ரீமேக்காகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தையும் முதல் பிரதி அடிப்படையில் பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்திற்கு சந்தானம் தயாரிக்கிறார். இப்படத்தை ஸ்ரீநாத் இயக்கவிருக்கிறார்.

இப்படத்திற்காக பெரிய செட் ஒன்றை சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் போட்டிருக்கிறார்கள். விரைவில் அங்கு படப்பிடிப்பு தொடங்குகிறது.

தனது தயாரிப்பு நிறுவனம் மூலமே தயாரிக்க இருப்பதால், சந்தானம் தொடர்ச்சியாக தேதிகள் ஒதுக்கிக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்