பால்கி இயக்கத்தில் அக்ஷராஹாசன் நடிக்கவிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகின் படங்களில் நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து கமலின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசனும் இந்தி திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார்.
பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் மூவரும் இணைந்து நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இச்செய்தியினை தனுஷ், அக்ஷராஹாசன் இருவருமே தங்களது ட்விட்டர் தளத்தில் உறுதி செய்தனர்.
இந்நிலையில் அக்ஷராஹாசன் நடிக்க இருப்பது குறித்து கோவா திரைப்பட விழாவில் கமலிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “அக்ஷராஹாசன் பால்கி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சந்தோஷமாக இருக்கிறது. அவருக்கு எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கமல் கூறியுள்ளார்.
பால்கி இயக்கவிருக்கும் இப்படம் 2014ல் தான் துவங்குகிறது. தனுஷ், அமிதாப், அக்ஷராஹாசன், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், பால்கி இணைந்து இப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago