சினிமாவில் அத்தனை கட்டுப்பாடுகளையும் 'மாநகரம்' திரைப்படம் உடைத்துள்ளது என எடிட்டர் ப்ரவீன் கே.எல் தெரிவித்துள்ளார்.
புதுமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ மற்றும் ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'மாநகரம்'. ரியாஸ் இசையமைக்க, செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். அனைத்து பணிகளும் முடிந்து மார்ச் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
நேற்று தயாரிப்பாளர் பிரபு தன்னுடைய நெருங்கிய திரையுலக நண்பர்களுக்கு திரையிட்டுக் காட்டினார். இப்படத்தைப் பார்த்த எடிட்டர் ப்ரவீன், "நேற்றிரவு ’மாநகரம்’ திரைப்படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு இளம் அணியிடம் இருந்து சிறப்பான படம்.
படத்தின் முதல் காட்சியிலிருந்து அதில் ஆழ்ந்திருப்போம். திரைக்கதையும், காட்சியமைப்பும் சினிமாவின் அத்தனை கட்டுப்பாடுகளையும் உடைத்துள்ளது. ஓர் உணர்வை எழுதி அதை அப்படியே திரையில் கொண்டு வருவது கடினமான வேலை.இயக்குநர் லோகேஷ் அதை அற்புதமாக செய்துள்ளார். துணைக்கு அபாரமான ஒளிப்பதிவு, பின்னணி இசை, மற்றும் அருமையான படத்தொகுப்பு.
இந்தப் படத்தின் தாக்கம் நம்மிடையே நீண்ட நேரம் இருக்கும். சார்லி, சந்தீப், ஸ்ரீ, ரெஜினா, முனீஷ்காந்த் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். எஸ்.ஆர். பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இருவரையும் இந்தப் படம் தயாரித்ததற்காக பாராட்ட வேண்டும். 'மாயா', 'ஜோக்கர்', 'காஷ்மோரா', இப்போது 'மாநகரம்' ஆகிய படங்கள் மூலம் தென்னகத்தின் யுடிவி ஸ்பாட் பாய் இந்த நிறுவனம் எனத் தெரிகிறது.
இந்த ஒட்டுமொத்த குழுவின் அர்ப்பணிப்பான முயற்சிக்கு பெரிய வெற்றி சேர வேண்டும் என வேண்டுகிறேன். திரைப்பட பிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய, ஆதரிக்க வேண்டிய படம். பார்த்தால் கண்டிப்பாக மகிழ்வீர்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
25 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago