கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள ’நரகாசுரன்’ படத்தை தயாரிக்கவுள்ளார் இயக்குநர் கவுதம் மேனன்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'துருவங்கள் 16'. கடந்தாண்டின் இறுதிப்படமாக இப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புதுமையான திரைக்கதை, எடிட்டிங் என பல்வேறு விஷயங்களுக்கு விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
இயக்குநர் கார்த்திக் நரேன் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். தனது அடுத்த படம் 'நரகாசுரன்' என்று தலைப்பிடப்பட்டு இருப்பதாகவும், இதில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகிலிருந்து ஒவ்வொரு நாயகர்கள் நடிப்பார்கள் என்று தெரிவித்தார் கார்த்திக் நரேன்.
இப்படத்தில் அரவிந்த்சாமி மற்றும் நாக சைத்தன்யா நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும், கவுதம் மேனன் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், கார்த்திக் நரேன் இதனை உறுதிப்படுத்தவில்லை.
நேற்று கவுதம் மேனனின் பிறந்த நாளை முன்னிட்டு, 'நரகாசுரன்' படத்தை தயாரிக்கவிருப்பதை உறுதிப்படுத்தினார். மேலும், 'நரகாசுரன்' படம் குறித்து கார்த்திக் நரேன், "’நரகாசுரன்’ படம் நான் இயக்க விரும்பும் ட்ரைலஜி என சொல்லப்படும் மூன்று பட வரிசையில் இரண்டாவது படம்.
’துருவங்கள் பதினாறு’ படத்தின் அதே களம் தான் நரகாசுரனும். இரண்டும் கர்மா, நம்பிக்கை உள்ளிட்ட கருத்துக்களின் அடிப்படையில் இருக்கும். ’துருவங்கள் 16’ பட வெற்றி ரசிகர்கள் எவ்வளவு முதிர்ச்சியடைந்துவிட்டார்கள் என்பதை நிரூபித்தது.
அதனால், ’நரகாசுரன்’ படத்தின் திரைக்கதை இன்னும் சவாலாக, சிக்கலாக இருக்கும். நரகாசுரன் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும். இது ஒரு ஆச்சரியம் தரக்கூடிய படமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago