விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பார்த்திபன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குன்னூர் மற்றும் சென்னையில் தொடங்கி முடிவுற்று இருக்கிறது. விக்ரமை மட்டும் வைத்து சில முக்கிய காட்சிகளை காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு.
இப்படத்துக்கு இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. முதலில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட அனு இம்மானுவேல் கால்ஷீட் தேதிகள் பிரச்சினை காரணமாக விலக 'பெல்லி சூப்புலு' பட நாயகியான ரீது வர்மாவை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.
இப்படத்தை கவுதம் மேனனின் 'ஒன்றாக என்டர்டையின்மென்ட்' நிறுவனம் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பார்த்திபன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
முன்பு சூர்யா நடிப்பில் தொடங்கப்பட்ட 'துருவ நட்சத்திரம்' படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பார்த்திபன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்திலும் அதே கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் பார்த்திபன்.
விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வரும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன், 'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் விக்ரம்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago