தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் நடிகர் விஷால், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். விஷாலின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், விஷாலின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி் திரைப்படத் தயாரிப்பாளரான கேயார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நடந்தது. அப்போது நடிகர் விஷால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்தர், ‘‘ தயாரிப்பாளர் கவுன்சிலின் அடிப்படை விதிகளில் வேறு ஒரு சங்கத்தில் பதவி வகிக்கும் நபர்கள், நிர்வாகப் பதவிகளுக்கு போட்டியிடக்கூடாது என கூறப்படவில்லை. எனவே ஏற்கெனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் நடிகர் விஷால், தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் எந்த தடையுமில்லை” என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, ‘‘ஏற்கெனவே தேர்தல் விதிமுறைகள் குறித்தும், தேர்தலை முறையாக நடத்தவும் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார். தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் விஷாலின் மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டுள்ளார். தேர்தல் அதிகாரியின் முடிவுக்குள் இந்த நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை. எனவே மனுதாரரான கேயார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
சினிமா
28 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago