அஜித்தின் 8 பேக்ஸ்

By செய்திப்பிரிவு

அஜித் - கெளதம் மேனன் இணையும் படத்திற்கான ஆரம்பகட்ட வேலை கள் நடந்துவரும் நிலையில் அப்படத் தைப் பற்றி சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகிறது.

இப்படத்தில் முதன் முறையாக முழுநீள போலீஸ் அதிகாரியாக களமிறங்கிறார் அஜித். நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். போலீஸ் அதிகாரி வேடம் என்பதால், உடம்பை மிகவும் குறைத்து, 8 பேக்ஸ் வைக்க திட்டமிட்டுள்ளாராம் அஜித். யம்மாடி அதற்காக ஜிம்மிலேயே தவம் கிடக்கிறார். அதோடு சால்ட் & பெப்பர் லுக்கில் இருந்து முற்றிலும் இளமையாக நடிக்க இருக்கிறாராம்.

நீண்ட நாட்களுக்கு முன்பு அஜித் - கெளதம் மேனன் இணைய இருந்தார் கள். ஆனால் கருத்து வேறுபாடு காரண மாக இருவரும் பிரிந்து விட்டார்கள். அதற்கு பிறகு விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களிடம் அக்கதையை கெளதம் மேனன் கூறினார். ஆனால், யாருமே நடிக்க முன்வரவில்லை.

கெளதம் மேனன் படத்தில் இருந்து சூர்யா விலகியதைத் தொடர்ந்து, கெளதம் மேனனை அழைத்துள்ளார் அஜித். “இந்த முறை நம்ம கூட்டணி மிஸ்ஸாக கூடாது. நாம பண்றோம், ஏ.எம்.ரத்னம் தான் தயாரிப்பாளர்” என்று கூற சந்தோஷத்தில் திளைத்தார் கெளதம் மேனன்.

முதலில் அஜித்தை சந்திக்கும் போது கூறிய, அதே போலீஸ் அதிகாரி கதையை கையில் எடுத்திருக்கிறார் கெளதம் மேனன். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசி வருகிறார். 5 மாதங்களில் முழுப் படப்பிடிப்பையும் முடித்து, தீபாவளிக்கு வெளியிட திட்ட மிட்டு இருக்கிறார்கள்.

மார்ச் 15ம் தேதிக்கு பிறகு படப்பிடிப்பைத் தொடங்கவுள்ள நிலையில் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்