நடிப்பு, டைரக்ஷன்னு கவனம் செலுத்துறதால, ‘இந்த மூணுல எது உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?’’னு பல பேர் என்னிடம் கேட்பாங்க. அந்தக் கேள்வி பாதி முடியுறதுக்குள்ளேயே, ‘நடனம்தான்’னு பதில் சொல்லிடுவேன். ஏன்னா, சினிமாவுல எனக்கு முதல் அங்கீகாரம் கிடைச்சது நடனத்துலதான். அது ஒரு தனி உலகம். எப்பவும் என் மனசுக்குப் பிடிச்ச விஷயமா அது இருக்கு. இன்னும் கேட்டா, அது வேற லெவல்னுதான் சொல்வேன்!
நடனம், நடிப்புன்னு வந்ததுக்குப் பிறகு ஒரு மாஸ்டரா இருந்து டான்ஸ் கம்போஸ் செய்றது குறைய ஆரம்பிச்சுட்டுன்னு முன்பே சொல்லியிருக்கேன். அந்த நேரத்தில் எப்போதாவது ஒரு பாட்டுக்கு நடனம் கம்போஸ் செய்யக் கூப்பிட்டாங் கன்னா, அந்தப் பட டைரக்டரிடம் ‘ரெக்யூஸ்ட்’டா சொல்லிக்கிற விஷ யம், ‘‘நான் பண்ணணும்னு நீங்க நினைக்கிற பாட்டுல நிறைய கதையைக் கொண்டுட்டு வந்துடாதீங்க’’ன்னு கேட் டுப்பேன். ஏன்னா, ‘‘கதையைக் கொண் டுட்டு வந்துட்டா, அந்தப் பாட்டு ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள வந்துடும். முழுசா நீங்க எதுக்காக என்னை கூப்பிடுறீங் களோ, அதை என்னால பிரதிபலிக்க முடியாது’’ன்னும் சொல்வேன். அப் படியே கதையைக் கொண்டுட்டு வந்தா, டான்ஸுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இருக்கக் கூடாதுன்னும் கேட்டுப்பேன்.
இப்போ இதை சொல்றதுக்கு உதாரணமா, ஒரு ஹிந்தி பாட்டை சொல்றேன். ஒருமுறை ‘லக்ஸ்யா’ என்ற ஹிந்தி படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் அமைச்சேன். படத்தின் டைரக்டர் ஃபரான் அக்தர். ஒரு பிப்ரவரி மாசத்தில் சென்னைக்கு வந்து, ‘‘மே மாதம் அஞ்சுலேர்ந்து பத்தாம் தேதி வரைக்கும் அந்தப் பாட்டுக்கு கால்ஷீட் வேணும்’’னு கேட்டார். எனக்கு அந்த டைரக்டர் அப்போது பழக்கமே இல்லை. முதல் தடவையா எங்க வீட்டில் அவரை பார்க்கிறேன்.
‘‘திடீர்னு என்னை இந்தப் பாட்டுக்கு கூப்பிடணும்னு எப்படி உங்களுக்கு தோணுச்சு?’’ன்னு அவரிடம் கேட்டேன். ‘‘உங்க கொரியோகிராஃபி பார்த்திருக்கேன். எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஹிர்த்திக் ரோஷன் பண்றார். உங்க காம்பினேஷன் நல்லா இருக்கும். உங்க ஸ்டைல் ஆஃப் டான்ஸிங் அவ ருக்கு சரியா இருக்கும் சார்!’’னு சொன்னார். நானும் அதை கேட்டுட்டு, ‘‘சரி, நான் பண்றேன், ஆடியோ சிடியைக் கொடுங்க’’ன்னு கேட்டேன். ‘‘இன்னும் ரெடியாகலை. அடுத்த வருஷம் மார்ச்ல ரெடியாகிடும்’’னு சொன்னார். எனக்கு ஒண்ணுமே புரியலை. உடனே அவர், ‘‘இந்த வருஷம் இல்லை. அடுத்த வருஷம் மே மாதம்’’னு சொன்னார். எனக்கு பயங்கர ஆச்சர்யம்.‘‘இவ்வளவு முன்னா டியே தேதி வாங்கி, சரியா பிளான் செய்து எடுக்க முடியுமாங்க?’’னு அவரிடமே கேட்டேன். ‘‘நாங்க அப்படித்தான் பிளான் பண்ணியிருக்கோம் சார்!’’னு சொன்னார். அவர் சொன்ன மாதிரி அடுத்த வருஷம் மார்ச் மாதம் பாட்டோட வந்தார்.
அந்தப் பாட்டுக்கு மூணு செட் போட்டு, பாட்டுக்கு இடையில கதை எல்லாம் வைத்து ஷூட் பண்ணத் திட்டமிட்டு வைத்திருந்த ஐடியாவை என்னிடம் சொன்னார். அதை கேட்டுட்டு, ‘‘நீங்க சொல்றதெல்லாம் சரி சார். ஆனா, பாட்டில் நிறைய கதை சொல்ல விரும்புறீங்க. நீங்க சொன்ன மாதிரி முதன்முதலா நானும், ஹிர்த்திக் ரோஷனும் சேர்ந்து பண்ற பாட்டு. என்னோட ஸ்டைல் ஆஃப் டான்ஸ் மிஸ்ஸாகிடும். அது எனக்கு பெருசா வேலையில்லாத மாதிரி ஆகிடுமே’’ன்னு சொன்னேன்.
அவர் டக்குன்னு புரிஞ்சிக்கிட்டார். அப்புறம் திரும்பவும், ‘‘மூணு செட் எல்லாம் வேணாம். ஒரே ஒரு செட். பிளாக் செட். ஹீரோ வொயிட் அண்ட் வொயிட் டிரெஸ்ல. டான்ஸர் பாய்ஸோட ஆடுனா, நீங்க என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீங்களோ அது வரும்!’னு சொன்னேன். இப்படித்தான் எடுக்கணும்னு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே திட்டமிட்டு வைத்திருந்த அவரோட பிளானை அந்த நேரத்தில் அப்படியே விட்டுட்டு நான் சொன்னதுக்கு உடனே ஓ.கே சொன்னார்.
நாலு நாட்களில் அந்தப் பாடல் காட்சியை எடுத்து முடித்தோம். அந்தப் பாட்டுத்தான், ‘மே அய்ஸா க்யூன் ஹே’. இரண்டாவது முறையா எனக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த பாட்டு அது. அந்த முழு பாட்டுக்கும் ஒரு சின்ன அறையில் முப்பதே நிமிஷத்துல டான்ஸ் கம்போஸ் செஞ்சேன். கடவுளோட ஆசியால அது நல்லாவும் வந்தது. அப்படி அமைஞ்சதுக்கு டைரக்டர் ஃபரான் அக்தர், அந்தப் பாட்டுக்கு ஆடின ஹீரோ ஹிர்த்திக் இவங்களும் முக்கிய காரணம்.
இப்போ எடுக்கிற ‘தேவி’ படத்தில், ‘‘ஒரு பாட்டுக்கு நீங்க கம்போஸ் பண்ணுங்க?’’ன்னு டைரக்டர் விஜய் கேட்டார். தமன்னாவும் கேட்டாங்க. நான் பண்றதா இருந்தா, ‘‘பதினைஞ்சு, இருபது நாட்கள் ரிகர்சல் பண்ணத் தயாரா?’’ன்னு கேட்டேன். அவங்களும் ஓ.கேன்னு சொன்னதோட, நாலஞ்சு படங்களில் நடிச்சுட்டு இருக்கிற பிஸியிலேயும் கால்ஷீட் கொடுத்து சொன்ன மாதியே ரிகர்சல் செஞ்சாங்க. அந்தப் பாடலை ஒன்றரை நாட்கள்லயே ஷூட் செஞ்சு முடிச்சோம். எனக்குத் தெரிஞ்சு சமீபத்தில் சவுத்ல ஒரு ஹீரோயின் இப்படி டான்ஸ் ஆடியிருக்க முடியுமாங்கிற லெவல்ல பாட்டு வந்திருக்கு. அதுக்கு முக்கிய காரணம் தமன்னாவோட உழைப்புதான்.
ஒரு பாட்டுக்கு மாஸ்டரா வேலை பார்த்துட்டா, அதிலேயே எனக்கு அடுத்து ஒரு படம் பண்றதுக்கான எனர்ஜி வந்துடும். தெலுங்குல ‘பவுர்ணமி’னு ஒரு படம் டைரக்ட் பண்ணேன். அது நினைச்ச அளவுக்கு போகலை. அதுக்கு அப்புறம்தான் ‘சிவாஜி’ படத்தில் வர்ற ‘ஒரு கூடை சன் லைட்’ பாட்டுக்கு மாஸ் டரா வேலை பார்த்தேன். அந்தப் பாட்டை முடிச்சதும் அப்படி ஒரு எனர்ஜி. அடுத்து பண்ணின படம்தான் ‘போக்கிரி’. இப்படித் தான் ஒரு நல்ல பாட்டு பண்ணும்போது என்னை அறியாமலேயே உள்ளுக்குள்ள சார்ஜ் ஏறிடுது.
பிறகு என்னோட அப்பா, அம்மாவை விட்டு பிரிஞ்சு வந்து என் பையன், ‘அவங்க’ன்னு டிராவல் ஆகிட்டிருந்த நான், மறுபடி யும் என் பெற்றோர்கிட்ட எந்தச் சூழல்ல பேசினேன் என்பதை உங்கக்கிட்ட சொல்றேன்னு முன்னாடி கூறியிருந் தேன். அதை இந்தத் தொடரோட கடைசியில் சொல்றேன். இப்போ அதை சொன்னா, அதுதான் இவ் வளவு நாள் நான் எழுதுற இந்தத் தொடரோட கிளைமாக்ஸா இருக்கும். அதனால என்னோட உலகத்தில் நடந்த ஜாலியான விஷயங்களை எழுத, திரும்பவும் நான் என்னோட சினிமா ப்ளாஷ்பேக்குக்குள்ளே போறேன்.
கல்யாணத்துக்குப் என்னோட சினிமா டிராவல்ல நிறைய சந்தோஷமான திருப்பங்கள் நடந்திருக்கு. அதில் 2004-ல் ஒரு முக்கியமான திருப்பம் நடந்துச்சு. அதைப் பத்தித்தான் அடுத்து சொல்லப் போறேன்.
- இன்னும் சொல்வேன்…
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago