'வேலையில்லா பட்டதாரி' படத்தின் டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக், கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என அறிவிப்பு.
தனுஷ், அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வேலையில்லா பட்டதாரி'. அனிருத் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி வருகிறார். வுண்டர்பார் நிறுவனம் மூலம் இப்படத்தினை தயாரித்து வருகிறார் தனுஷ்.
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 25 வது படம் 'வேலையில்லா பட்டதாரி' என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை வெளியீடு ஜனவரி 3ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே தனுஷ் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் டீஸர், ஃபர்ஸ்ட் லுக் குறித்து தனுஷ் தனது ட்விட்டர் தளத்தில், "'வேலையில்லா பட்டதாரி' படத்தின் டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ம் தேதி வெளியாகும். ஜனவரி 3ம் தேதி படத்தின் இசையும், கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும்" என்று தெரிவித்திருக்கிறார்.
"வேலையில்லா பட்டதாரி! தொட்டு பாத்தா, ஷாக் அடிக்கும் வேறமாதிரி" என தொடங்கும் பாடலை தனுஷ் எழுதியிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago