'வேலாயுதம்' படத்தின் மூலம் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஜெயம் ராஜா இப்போது நடிகராகி இருக்கிறார்.
'ஜெயம்', 'எம். குமரன் S/O மகாலட்சுமி', 'சந்தோஷ் சுப்பிரமணியம்', 'வேலாயுதம்' ஆகிய வரவேற்பு பெற்ற படங்களை இயக்கிய ஜெயம் ராஜா, 'என்ன சத்தம் இந்த நேரம்' படத்தின் மூலம் நடிகராகி இருக்கிறார்.
ஏ.வி.ஏ புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகி வரும் படம் 'என்ன சத்தம் இந்த நேரம்'. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராக இருந்த குரு ரமேஷ் இப்படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார்.
படத்தின் பெரிய ஸ்பெஷல் : ஒரே பிரசவத்தில் பிறந்து, ஒரே தோற்றம் கொண்ட 8 வயதே ஆன நான்கு பெண் குழந்தைகள் அதீதி, ஆக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இதுவரை உலக அளவில் சினிமாவில் இப்படி நடந்தது இல்லை.
இயக்குநர் ஜெயம் ராஜா இப்படத்தின் கதையைக் கேட்டு மிகவும் பிடித்துபோக, தனது படம் சம்பந்தமான வேலையில் மும்முரமாக இருந்தாலும், அவ்வப்போது நேரம் ஒதுக்கி, முதன்முறையாக இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அஜித் நடித்த 'காதல் மன்னன்' படத்தில் நாயகியாக நடித்த மானு, 15 வருடங்களுக்குப் பிறகு, இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நிதின் சத்யா, மாளவிகா வேல்ஸ், புரளவன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, சிவசங்கர், மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.
படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago