சமீபத்தில் தோட்டா ராய் கூறிய விஜய் படத்தின் கதைக்கும் படத்திற்கும் சம்பந்தமில்லை. படத்தின் கதை வேறு என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
விஜய், சமந்தா, தோட்டா ராய் செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். தற்போது ராஜமுந்திரியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் தோட்டா ராய் சௌத்ரி அளித்த பேட்டியில், இப்படத்தின் கதையை கூறிவிட்டார் எனப்பட்டது. அவர் சொல்லியதனடிப்படையில், கதையில், இவரை பிடிப்பதற்காக கொல்கத்தா போலீஸ், விஜய்யின் உதவியை நாடுகிறது. விஜய்யின் உதவியால் தாதாவை பிடித்து ஜெயிலில் அடைக்கிறார்கள். ஜெயிலில் இருந்து தப்பிக்கும் வில்லன், விஜய்யை கொலை செய்யத் தேடுகிறான். அப்போது தான் விஜய் தோற்றத்தில் இருவர் இருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது. இறுதியில் என்னவாகிறது என்பது தான் படத்தின் கதை எனப்பட்டது.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் படத்தின் கதை இதுவல்ல என்று மறுப்பு தெரிவித்து இருக்கிறார். தோட்டா ராய் செளத்ரி படத்தின் வில்லனே அல்ல, நாங்கள் படத்தின் வில்லனை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமன்றி, கொல்கத்தாவில் படமாக்கப்பட்ட துரத்தல் காட்சிக்கு ஒருவர் தேவைப்பட்டது. அதற்காக மட்டுமே தோட்டா ராய் செளத்ரி நடித்து கொடுத்தார். படத்தின் கதையே வேறு என்றும் தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago