’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்க பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஜய் சேதுபதி.
தொடர்ச்சியாக 5 படங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பிற்கு தனது நன்றியை தெரிவித்துவிட்டு, கேள்விகளுக்கு பதிலளிக்க ஆரம்பித்தார்.
அவர் பேசியதிலிருந்து : “ 'ரம்மி' எனது அடுத்த ரிலீஸாக இருக்கும், 'பண்ணையாரும் பத்மினியும்' படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
கதைக்கு தேவையான நாயகியை இயக்குநர் தான் தேர்வு செய்வார், அதில் ஒருபோதும் நான் தலையிட்டதில்லை. இனி நடிக்கவிருக்கும் படங்களிலும் அப்படித்தான்.
கதைக்கு தேவை என்றால் வேறு நாயகர்களுடன் இணைந்து நிச்சயம் நடிப்பேன். விதார்த்துடன் ஒரு படம், ஆர்யாவுடன் ஒரு படம் என அடுத்து வரும் எனது படங்கள் இரண்டு கதாநாயகர்கள் இடம்பெறும் கதைதான். நான் ஒருபோதும் அதற்கு மறுப்பு சொல்லவேமாட்டேன். என்னுடைய கதாபாத்திரம் என்ன, கதை பிடித்திருக்கிறதா.. அவ்வளவு தான் எனக்குத் தேவை.
நான் 'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது நிறைய கதை கேட்டேன். அதில் கமிட் ஆன படங்களே இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு கால்ஷீட் ஃபுல் ஆகிவிட்டது,
என்னைப் போன்ற ஆட்கள் சினிமாவில் ஜெயிப்பது பெரிய விஷயம். அப்படியிருக்கும் போது படம் தயாரிப்பது எனக்கு கஷ்டமாக தெரியவில்லை. நானும் இந்த சினிமாவில் தானே இருக்கிறேன், அதையும் செய்து பார்ப்போமே என்றுதான் இறங்கினேன். அதுமட்டுமல்லாமல் நான் முழுப்படத்தையும் தயாரிக்கவில்லை. முதல் பிரதி அடிப்படையில் தான் தயாரிக்கிறேன். அதை முழுவதும் விளம்பரம் செய்து ரிலீஸ் செய்வது JSK நிறுவனம் தான். அவர்களுக்கு ஏற்கனவே நிறைய அனுபவம் உண்டு என்பதால் மீதி வேலையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்.
'சங்கு தேவன்' படத்தில் கொஞ்சம் வயதான வேடம் என்பதால் அந்த மீசை தேவைப்பட்டது. தற்சமயத்துக்கு 'சங்கு தேவன்' படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு இதுதான் காரணம்”
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago