அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டரில் தெரிவித்துள்ள வேதனை ட்வீட் ஒன்றுக்கு நடிகர் அரவிந்த்சாமி பதில் கருத்து வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இருவருக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. நேற்று எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்குப் பிறகு அனைவரையும் பேருந்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.
எங்கு கொண்டு சென்றனர் உள்ளிட்ட எந்த ஒரு தகவலையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதால் சமூக வலைதளத்தில் நையாண்டிகளும் விமர்சனங்களும் கொட்டப்பட்டன.
இந்நிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜ் தனது ட்விட்டர் தளத்தில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார்.
அதில், "கடந்த 48 மணி நேரமாக, எம்.எல்.ஏக்களை இப்படியாக நையாண்டி செய்து, தொலைபேசியில் அழைத்து துன்புறுத்துவது எந்த வகையில் நியாயமானது? எங்கள் சுதந்திரத்துக்கான உரிமை எங்களிடம் உள்ளது" என்று தெரிவித்தார்.
மாஃபா பாண்டியராஜனின் ட்வீட்டை மேற்கோள்காட்டி அரவிந்த்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த மாதிரியான தருணங்களில் மக்கள் கண்டிப்பாக அவர்களது கருத்தை வெளிப்படுத்த வேண்டும். அதற்கேற்றார் போல் நீங்கள் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையில். அது எப்படியான கருத்தாக இருந்தாலும் சரி" என்று பதிலளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago