என் பையனும் ‘அவங்க’ளும் இருந்த அண்ணா நகர் வீட்டுக்கு நான் மாறின அந்த நேரத்துலதான் தெலுங்குப் படங்கள்ல நிறைய கமிட் ஆக ஆரம்பிச்சேன். வீடும் மாறினேன். ஆனா, என்ன மாயமோ என்னவோ தெரியலை. எனக்கே தெரியாம ஸ்டேட்டே மாறிட்டேன். தமிழ் படங் கள்ல நடிச்சிட்டிருந்த நான், திடீர்னு ரெண்டு மூணு வருஷங்க தெலுங்குப் படங்களுக்குள்ளே போனேன். வீடு விட்டு வீடு மாறினதே பெரிய விஷயமா இருந்ததால, அந்த நேரத்துல ஸ்டேட் விட்டு ஸ்டேட் மாறின அதிசயம் எனக்கு அப்புறம்தான் புரிஞ்சுது. அதுவும் இல்லாம, நான் டான்ஸ் மாஸ்டரா தெலுங்குப் படங்கள் பண்ணினதால, இப்போ மாறியது அவ்வளவு மாற்றமா தெரியலை.
அங்கே முக்கால்வாசிப் பேர் தெரிஞ்ச முகமாத்தான் இருந் தாங்க. ஒரு நடிகனா மெயின் லீட் கதாபாத்திரமும் பண்ணேன். டபுள் ஹீரோ பண்ணேன். முக்கியமான கதாபாத்திரமும் பண்ணேன். சின்னப் படங்களும் பெரிய படங்களும் பண் ணேன். நான் செய்த சுமார் இருபது படங்கள்ல 90 சதவீதம் எல்லாமே ஹிட்தான். நல்ல பேரும் கிடைச்சுது. ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அதுக்கு படங்கள் ஹிட் ஆனது மட்டும் காரணமில்லை. இந்த ரெண்டு, மூணு வருஷம்தான் என் சினிமா கேரியர்ல படத்துக்கான டென் ஷன், இந்தப் படம் என்னாகுமோ, ஏதாகுமோங்கிற கவலை எதுவுமே இல்லாம இருந்தேன். மறுபடியும் நான் 2004-ல் டைரக்டர் ஆனதும் இதெல்லாமே வந்துடுச்சு. இது ஒரு மாதிரி ஜாலிதான்.
அப்பப்போ ஷூட்டிங் முடிஞ்சு சென்னைக்கு வரும்போது பையனோடு தான் அதிகம் நேரம் இருப்பேன். அப்போதெல்லாம் பயங்கர கண்டி ஷனா இருக்கிற அப்பாவா நான் மாறலை. ஏன்னா, அந்த நேரத்துல எல்லாம் நானே ஒரு விளையாட்டுப் பையன் மாதிரிதான் இருந்தேன். பொதுவா பசங்களுக்கு காய்ச்சல்னா வெளியில அழைச்சுட்டுப் போகக் கூடாது, விளையாடக் கூடாதுன்னு சொல்வோம். ஆனா, அதையெல்லாம் பெருசா எடுத்துக்காம என் பையன் கேட்டா, விளையாட விடுவேன். எங்கேயாவது வெளியே போகணும்னா தாராளமா கூட்டிட்டுப் போவேன். அதே மாதிரி படிப்புல கொஞ்சம் கம்மியா மார்க் எடுத்திருக்கான்னா, ‘‘ஓ.கே அடுத்த முறை நல்ல மார்க் எடு’’ன்னு சொல்வேன். இப்படி ஒரு அப்பாவாத்தான் என்னால இருக்க முடிஞ்சுது. என் விஷயத்துல அதுதான் சரின்னும் எனக்குத் தோணுச்சு.
பையனை தூக்கி வெச்சிக்கிறது, அவனுக்கு விளையாட்டு காட்டுறது, சாப்பாடு ஊட்டுறது, அழுதா சமாதானப் படுத்துறதுன்னு, இதெல்லாம் எது வுமே அப்போ எனக்கு பழக்கத்துல இல்லை. அன்னைக்கெல்லாம் என் னோட நண்பர்கள் என் பையனை பார்த்துக்கிட்ட அளவுக்குக்கூட என் னால பார்த்துக்கத் தெரியலை. ஏன்னா, அவன் பொறந்ததுலேர்ந்து ஏழு வருஷம் கழிச்சுத்தான் அவன்கூடவே இருந்ததனால, அதெல்லாம் எனக்குத் தெரியவே இல்லை. என் பையன்கூட இருக்கிற ஒரு பையன் மாதிரிதான் நானும் இருந்தேன்.
வீட்டுல ஏதாச்சும் வேணும்னா, செய்யணும்னா என்னைக் கேட்பாங்க. எதைப் பத்தியும் பெருசா கவலை இல்லாம ஜாலியா சுத்திட்டிருக்குற எனக்கு, இதெல்லாமே வித்தியாசமா தெரிஞ்சுது. அது பிரம்மிப்பாவும் இருந்துச்சு. இந்த மாதிரி அப்பப்போ என்னோட வாழ்க்கையில மாறிட்டிருந்த விஷயங்கள் எல்லாமே ஏதோ ஒரு புது உணர்வை கொடுத்துச்சு.
அந்த நேரத்தில்தான் பத்திரிகை களும் என்னைப் பற்றி எழுதறதையும் நிறுத்திட்டாங்க. அதுக்கு முன்னாடி ஏதாவது ஒரு செய்தி வந்துட்டே இருக் கும். ஒரு கட்டத்துக்கு மேல அவங் களுக்கு போர் அடிக்க ஆரம்பிச்சுடுச் சுன்னு நினைக்கிறேன். எப்பவுமே அதிகம் பேச மாட்டேன். அதுவும் சொந்த வாழ்க்கை பற்றி சுத்தமாப் பேச மாட்டேன். என்னைப் பற்றி அப்படின்னு, இப்படின்னு செய்தி வர்றப்ப, அதுக்கு பெருசா மறுப்பும் தெரிவிக்கிறதில்லை. அதனாலயே என்னைப் பத்தி அதிகம் செய்தி வந்துட்டே இருக்கும். என் னோட நண்பர்கள்தான் படிச்சுட்டு அப்பப்போ, ‘‘என்னடா இது?’’ன்னு கேட்பாங்க. ‘‘அதெல்லாம் விடுடா’’ன்னு சொல்லிடுவேன். அதை பெருசா எடுத் துக்கிட்டதே இல்லை. இதுவரைக்கும் என் வாழ்க்கையில எத்தனை பேட்டி யில் பேசியிருப்பேனோ, அதையெல் லாம் சேர்த்தாக் கூட இப்போ நான் உங்கள்ட்ட பேசிக்கிட்டிருக்குற அள வுக்கு வராது.
‘தி இந்து’வுல இந்தத் தொடர் எழுது றோம். இது ஓ.கே-வா? இல்லையா? என்னன்னு எனக்குத் தெரியலை. ஏன்னா, சில தடவை நமக்கு ஏற்பட்ட அடியைச் சொல்றோம், சில தடவை நம்ம பெருமையை சொல்றோம். இத னானெல்லாம் படிக்கிறவங்களுக்கு என்னன்னு நினைச்சுப்பேன். ஆனா, இந்தத் தொடரை படிச்ச சில பேர், ‘‘ஏங்க, உங்கத் தொடர் படிக்கிறேன். அதைப் படிக்கிறதோட மட்டுமில்லாம என்னோட பசங்கள்ட்ட யும் படிச்சுக் காட்டி அவங்களை கேட் கவும் வைக்கி றேன்’’ன்னு சொன் னாங்க. ‘ஓ… அப்படிங் களா?’’ன்னு கேட்டுக் கிட்டேன். ‘‘ஆமாங்க.. நீங்க உங்களோட சில தவறுகளை எல்லாம் எழுதியிருக்கீங்க. அதையெல்லாம் அவங்களுக்கு படிச்சுக் காட்டி, ‘‘இதெல்லாம் செய்யக் கூடாது’’ன்னு சொல் வோம். அம்மா, அப்பா எவ்வளவு முக்கியம்னு பிரபுதேவா சொல் றார், பாரு’’ன்னு சொல் வோம். இப்படியெல்லாம் சொல்றப்ப தான் ‘பரவாயில்லையே, நாம எழுது றது கொஞ்சம் யூஸ்ஃபுல்லாவும் இருக் கத்தான் செய்யுது போலிருக்கு’ன்னு நினைச்சுக்குவேன்.
அடுத்தடுத்து ஷூட்டிங், பைய னோட நேரம் செலவழிக் கிறதுன்னு அப்படியே நாட்கள் கடந்து போக ஆரம்பிச்சுது. ரெண்டு, மூணு வருஷங்கள் ஓடினதே தெரியலை. திடீர் திடீர்னு பல நேரத்துல அப்பா, அம்மாவோட ஞாபகம் வந்துடும். போன் பண்ணலாம்னு வீட்ல இருக்கிற போன்கிட்டே போவேன். படங்களில் காதலன், காதலியிடம் ஒரு சின்ன இடைவெளிக்கு அப்புறம் போன் பேசலாம்னு போறப்ப, கையெல்லாம் நடுங்கும். அந்த மாதிரிதான் எங்க அம்மா, அப்பாகிட்ட பேசலாம்னு போறப்ப, அப்படி ஒரு நடுக்கம் எனக்கும் வந்துடும். அதனா லயே பலமுறை போன் முன்னாடி போய் நின்னுட்டு பேசாம திரும்பி யிருக்கேன்.
அப்படி ஒரு பயத்தோடேயே இருந்த நான், என்னோட அம்மா, அப்பாவிடம் எப்போதான் பேசியிருப்பேன்னு நீங்க கேட்பீங்க? அந்தச் சந்தர்ப்பம் எப்படி உருவாச்சுங்கிறதை, அடுத்து சொல்றேன்.
- இன்னும் சொல்வேன்…
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago