மகாபாரதம் குறித்த கமலின் சர்ச்சை பேச்சு: அக்‌ஷராஹாசன் கருத்து

By மகராசன் மோகன்

எதைப் பற்றி பேசுவதாக இருந்தாலும் அப்பா ஆழமாக யோசித்த பிறகே பேசுவார் என்று மகாபாரதம் குறித்த கமல்ஹாசனின் சர்ச்சை கருத்துக்கு நடிகை அக்‌ஷராஹாசன் பதிலளித்துள்ளார்.

ஐஃபா விருதுகள் வழங்கும் திரைப்பட விழா இன்றும், நாளையும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்‌ஷராஹாசன் மகாபரதம் பற்றி கமல்ஹாசன் தெரிவித்த சர்ச்சை கருத்து குறித்து கூறியதாவது :-

மகாபாரதம் பற்றி அப்பா சொன்ன கருத்துக்கு குறித்து கேட்கிறார்கள். அப்பா எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார். வரலாற்றை திரும்பி பார்த்தால் அவரது பயணத்தில் இதுபோல் பலமுறை சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். அப்பா நடிப்பில் உருவாகிவரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் அக்கா ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்து வருகிறார். நானும் அவருடன் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன். கதை சரியாக அமைந்தால் நாங்கள் மூன்று பேரும்கூட இணைந்து நடிப்போம். ஹிந்தி படத்தில் திருமணம் செய்யாமல் கர்ப்பிணியாகும் வேடத்தில் நடிக்கிறேன். இது மிகவும் சவாலான வேடம்’’ இவ்வாறு அக்‌ஷராஹாசன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

சினிமா

51 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்