“பிக் பாஸ் தான் என்னுடைய முதல் தமிழ்ப்படம்”: ஆரவ் நெகிழ்ச்சி

By சி.காவேரி மாணிக்கம்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிதான் என்னுடைய முதல் தமிழ்ப்படம் என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் ஆரவ்.

கடந்த வருடம் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஆரவ். கடந்த சீஸனின் டைட்டில் வின்னர் என்பதைத் தாண்டி, ஓவியா - ஆரவ் இடையில் காதல் என்ற விஷயம்தான் பெரிதாகப் பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ஒரு வருடத்துக்கு மேல் ஆனாலும், இன்னும் ஓவியா - ஆரவ் காதல் விஷயத்தை யாரும் மறக்கவில்லை.

குறைந்தபட்சம், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு ஆரவ் - ஓவியா இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. டைட்டில் வின்னர் என்பதால் ஆரவுக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு வருடத்துக்குப் பிறகு இப்போதுதான் ‘ராஜபீமா’ என்ற படத்தில் ஹீரோவாகக் கமிட்டாகியுள்ளார் ஆரவ்.

மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கிளிட்ஸ்’18 நிகழ்ச்சியில் பதில் அளிக்கும் வகையில் பேசினார் ஆரவ்.

“பிக் பாஸ் நிகழ்ச்சிதான் என்னுடைய முதல் தமிழ்ப்படம். அந்தப் படம்தான் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடி என்னை எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது.

‘பிக் பாஸ்’ மூலம் எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வந்திருக்கிறது. மக்களுக்கு நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். அப்படியொரு படமாக ‘ராஜபீமா’ கிடைத்திருக்கிறது. எல்லாருக்கும் பிடிக்கும் படமாக இது இருக்கும். ஃபர்ஸ்ட் லுக் வெளியானதற்கே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார் ஆரவ்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சக்தி, ‘நீங்களும் ஓவியாவும் இணைந்து நடிப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், ஹரிஷ் கல்யாண் - ரைஸா இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்துவிட்டனர். உங்களிடம் இருந்து காதல் படத்தை எப்போது எதிர்பார்க்கலாம்?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ஆரவ், “விரைவில் நிச்சயமாக எதிர்பார்க்கலாம். அனேகமாக இந்த மாத இறுதிக்குள் அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளிவரும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்