கிராமிய வாழ்வியலை, அதில் இழையோடும் இயல்பான நகைச்சுவையுடன் கலந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் மறைந்த இயக்குநர், தயாரிப்பாளர் மணிவாசகம். தற்போது அவரது மகன் காந்தி மணிவாசகம் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவருடன் ஒரு சந்திப்பு...
தேவயானியை நடிகர் தினேஷுக்கு மாமியாராக நடிக்க வைத்துவிட்டீர்களே...
இளவயது மாமியார் ஒருவர் இந்தக் கதைக்குத் தேவைப்பட்டர். தோற்றத்தில், அம்மாவும் மகளும் அக்காவும் தங்கையும்போல இருந்தால் கதைக்குப் பொருத்தமாக இருக்கும். இந்தத் திரைக்கதையை எழுதி முடித்ததுமே என் மனதில் முதல் சாய்ஸாக வந்து நின்றவர் தேவயானிதான்.
அவரைத் தொடர்புகொண்டபோது, “விளம்பரங்கள், அப்புறம் வருஷத்துக்கு இரண்டு மலையாளப் படம்னு அழகா போயிட்டிருக்கு. கடந்த 10 வருஷமா நான் தமிழ்ப் படங்கள்ல நடிக்கல. அதுக்குக் காரணம், நல்ல கேரக்டர்கள் வரவே இல்ல. நீங்க மட்டும் நல்ல கதையோடவா வந்திருக்கப் போறீங்க” என்றார்.
அவரிடம், ‘பத்து நிமிடம் மட்டும் கதையைக் கேளுங்க. அந்தப் பத்து நிமிடத்துக்குள்ள உங்களுக்குப் பிடிச்சா மட்டும் முழுக்கதையைக் கேட்க நேரம் ஒதுக்கிக் கொடுங்க’ன்னு கேட்டேன். நான் கதை சொல்லத் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலிருந்து சிரிக்கத் தொடங்கியவர், ரசிகர்கள் எந்த இடத்தில் எல்லாம் சிரிப்பார்கள் என்று நினைத்தேனோ, அங்கெல்லாம் தேவயானி சிரித்துக்கொண்டே இருந்தார்.
மறுநாள் என்னை வீட்டுக்கு அழைத்து முழு திரைக்கதையைக் கேட்டுவிட்டு, “வெயிட் பண்ணினாலும் தேவயானி ஒரு கேரக்டர் பண்ணினா அது ஒர்த்தா இருக்கும்ன்னு இந்தப் படத்துல எனக்குப் பெயர் கிடைக்கும்” என்று பாராட்டிவிட்டு நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஆனால் தேவயானியின் அபிமான ரசிகர்கள் படத்தின் போட்டோக்களைப் பார்த்துவிட்டு, ‘எங்க கதாநாயகியை எப்படி நீங்க கதாநாயகனுக்கு மாமியாராகக் காட்டலாம்?’ என்று கேட்டு என்னிடம் போனில் சண்டை போடத் தொடங்கிவிட்டார்கள். இப்போது என்மீது செல்லமாகக் கோபப்பட்ட ரசிகர்கள், படம் பார்க்கும்போது தேவயானி கேரக்டரை எப்படி அமைத்திருக்கிறேன் என்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
படத் தலைப்பைப் பார்த்தால், உங்களது அப்பாவின் பாதையை அப்படியே தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் எனத் தோன்றுகிறதே..?
அப்பாவிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதில் முக்கியமானது, சீரியஸ் என நினைக்கிற விஷயங்களை நகைச்சுவை மூலம் லைட் வெயிட்டாகக் காட்டி, ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்கவும் வைத்துச் சிந்திக்க வைத்துவிடுவார். அந்த பாணியிருந்து கடைசிவரை விலகாமல் 16 வெற்றிப் படங்களை இயக்கி, தயாரித்தவர்.
அவரது இயக்கத்தில் ‘பட்டத்து ராணி’ என்றொரு படம். 45 வயது ஆணைத் திருமணம் செய்துகொண்டு வாழநேரும் ஒரு 20 வயது இளம்பெண்ணின் கதை. விஜயகுமார் கதாநாயகன். நடிகை கௌதமி நம்பர் ஒன் இடத்தில் இருந்தபோது இந்தக் கதையில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டார்.
எப்படி என்று இப்போது சிந்தித்துப் பார்க்கும்போதுதான், சீரியஸ் பிரச்சினைகளை அவர் எப்படிச் சிரிக்கச் சொல்லி நம் சிந்தனையைத் தொந்தரவு செய்திருக்கிறார் என்பது புரிந்தது. அப்பாவின் சாயல் என்னிடம் இருந்தாலும், இன்றைய தலைமுறையின் புத்திசாலித்தனங்களை எனது முதல் படத்திலும், அடுத்தடுத்த படங்களிலும் எதிர்பார்க்கலாம்.
மீண்டும் ஒரு மாமியார் – மருமகன் யுத்தம். அதுதானே கதை?
அதுதான் இல்லை. இதில் மாமியார் - மருமகன் இடையே ‘டக் ஆஃப் வார்’ என்று எதுவும் கிடையாது. இதில் பிரச்சினையே வேறு. தனக்கு வரும் கணவன் எப்படி இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு கனவு இருக்கும். ஆனால் எல்லாப் பெண்களுக்கும் நினைத்தது போலவே வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை.
எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக அமையும்போது ஏற்படும் ஏமாற்றத்தைக் காலப்போக்கில் சகித்துக்கொண்டு, விட்டுக்கொடுத்துப் போய்விடுகிறார்கள். ஆனால், தனக்கு அமையாத வாழ்க்கை தனது மகளுக்காவது அமையவேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது சல்லடை போட்டுத் தேடுவார்கள்.
மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் தீர விசாரித்து திருமணம் முடித்து வைப்பார்கள். ஆனால், இரண்டாவது முறையாகவும் ஏமாற்றம் என்றால் எந்தப்பெண்ணாலும் தாங்கிக்கொள்ள முடியாது. தேவயானி கதாபாத்திரம் சந்திப்பது இப்படிப்பட்ட சூழ்நிலையைத்தான்.
சீரியஸ் கதையை நகைச்சுவைக் களத்தில் கொடுக்கும்போது, இயல்பான ‘காமிக்கல் டுவிஸ்டுகள்’ தேவை. அவற்றை இந்தத் திரைக்கதையில் சரியான இடைவெளியில் வைத்திருக்கிறேன். முதல் ரீல் முடியும்போதே இந்தக் கதை எந்தப் பாதையில் பயணிக்கும் என்று ரசிகர்களுக்குத் தெரிந்துவிடும். ஆனால், 12 ரீல் வரை படத்தை விழுந்து விழுந்து சிரித்து ரசிப்பார்கள். அதற்கான திரைக்கதை பலமாக இருக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago