நல்ல புரிதல் இருந்தால் வெற்றி எளிது: ‘ராட்சசன்’ இயக்குநர் ராம் குமார் நேர்காணல்

By மகராசன் மோகன்

எந்த ஒரு சினிமாவும் மூணு பேரின் அலைவரிசை, மனநிலையைப் பொருத்துதான் அடுத்த கட்டத்துக்கு நகருது. ஒண்ணு இயக்குநர், அடுத்து தயாரிப்பாளர், மூணாவதா ஹீரோ. இவங்க மூணு பேரும் இந்தக் கதையை தொட்டால் சரியா வரும்னு அந்தக் கதை ஒரே நேர்க்கோட்டுல நின்னு யோசிக்க வைக்கணும். அதுபோலதான் இப்போ தொட்டிருக்கிற ‘ராட்சசன்’ படத்தையும் நல்ல புரிதலோடு அமர்ந்து உருவாக்கியிருக்கோம் என்கிறார் இயக்குநர் ராம் குமார்.

‘முண்டாசுப்பட்டி’  படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால், அமலாபால் கூட்டணியில் ‘ராட்சசன்’ படத்தை முடித்து, ரிலீஸ் வேலைகளில் கவனம் செலுத்தி வரும் அவருடன் ஒரு நேர்காணல்..

‘ராட்சசன்’ படம் வழியே என்ன சொல்ல வருகிறீர்கள்?

முதல் படமான ‘முண்டாசுப்பட்டி’ முழுவதும் காமெடி டைப். அதுல எவ்வளவு ஜாலியா ஒரு விஷயத்தை சொன்னோமோ, அப்படியே அதுக்கு எதிர்பக்கத்துல நின்னு பண்ணனும்னு தொட்ட கதைதான் இது. ஒரு கொலையைச் சுற்றி நடக்குற திரில்லர் களம். ஒரு சப்-இன்ஸ்பெக்டர், மிகப் பெரிய வில்லனை எப்படி அணுகுகிறார் என்று இந்தக் களம் நகரும். அதை எமோஷன் கலந்து பொழுதுபோக்கு அம்சத்தோட சொல்ற படமா வந்திருக்கு.

முதல் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தாலும், 2-வது படம் தாமதத்தையும், சில அனுபவத்தையும் கொடுக்கத்தான் செய்கிறது இல்லையா?

உண்மைதான். ஒரு படம் வெற்றிப் படம் ஆனதும், அடுத்து நமக்காக தயாராக இருக்கிறார்கள் என எதிர்பார்க்க முடியாது.

ரெண்டாவது படம் முழுக்கவித்தியாசமாத்தான் இருக்கணும்னு முடிவா இருந்தேன். ஆனால், சில தயாரிப்பாளர்கள் அதே பாணி கதைகளைக் கேட்கவே ஆர்வமாக இருந்தாங்க. அதனால, கொஞ்சம் தாமதமாச்சு. இதுக்காக யாரையும் நாம குறை சொல்ல முடியாது. இப்போ எடுத்திருக்கும் ‘ராட்சசன்’ படத்தின் தயாரிப்பாளர் என் முதல் படத்தை பார்த்துட்டு, ‘ஓ.கே.. இவர் படம் பண்ண தெரிந்த இயக்குநர்தான்’ என்று நம்பினார். ஒரு இயக்குநர் அந்த நம்பிக்கையைக் கொடுக்க வேண்டியது அவசியம்.

படத்தில் நாயகன் விஷ்ணு விஷால் எதிரியை சூறையாடும் காவல்துறை அதிகாரி என்பது தெரிகிறது. நாயகி அமலாபாலுக்கு என்ன வேலை?

அமலாபால் டீச்சரா வர்றாங்க. அவங்களோட மாணவர் ஒருவர் பாதிக்கப்படுகிறார். அந்த ஓட்டத்துல  ஹீரோவுக்கும், அவங்களுக்கும் இடையே சந்திப்பு நடக்குது. வில்லனைக் கண்டுபிடிக்க அவங்களும் பெரிய உதவியா இருக்காங்க. கதையோட கதா பாத்திரம் சொல்ற வேலையை மட்டும்தான் அமலாபால் செய்ய முடியும். இதில் வழக்கமான டூயட் எல்லாம் இருக்காது. இதுபோன்ற கதாபாத்திரத்தை அவங்க ஏற்பாங்களா என்று முதலில் சந்தேகம் இருந்தது. ஆனால், கதையையும், அது நகரும்  சூழலையும் உணர்ந்து நடிக்க வந்தாங்க. அது பெரிய சந்தோஷத்தை கொடுத்துச்சு.

‘ராட்சசன்’ டீஸர் பார்த்துட்டு, தனுஷ் உங்களை கதை தயார் செய்யச் சொல்லி இருக்காராமே?

ஒரு வருஷம் முன்பு, படத்தோட பிசினஸுக்காக தயாரிப்பாளர் ஒரு டீஸர் கட் கேட்டிருந்தார். வித்தியாசம் இருக்கட்டும்னு படத்தின் வில்லன் பார்வையில் ஒரு டீஸர் கட் செய்தோம். படத்தின் பெயரே வில்லனைக் குறிப்பதுதானே. அதனால அவரை முன்னிலைப்படுத்தி டீஸர் உருவாச்சு. தனுஷ் அதைப் பார்த்ததில், அவருக்கு ரொம்பவே பிடித்தது. அந்த சூழலில்தான் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் போய், ‘அவருக்குன்னு என்கிட்ட எந்த லைனும் இல்லை.கொஞ்சம் டைம் எடுத்துக்கிறேன்’னு சொல்லிட்டு வந்துட்டேன். திரும்ப 2 மாதங்களுக்கு முன்பு அவரை சந்திக்கிற சூழல் உருவாச்சு. 15 நிமிஷத்துல ஒரு பேன்ட்டஸி கதை சொன்னேன். ‘நல்லா இருக்கு ராம். கண்டிப்பா இதை பண்றோம்’ என்றார். என் முந்தைய 2 கதைகள் போலவே, இந்த படத்துக்கும் ஏழுல இருந்து எட்டு மாதம் வரை முழுசா முடிக்க நேரம் வேணும்’னு அவர்கிட்டயே சொன்னேன். ‘கண்டிப்பா எடுத்துக்கோங்க. அதுக்குள்ள நானும் சில வேலைகளை முடிச்சிடுறேன்’னு சொன்னார்.  ‘ராட்சசன்’ பட ரிலீஸ் வேலைகளுக்கு பிறகு அந்த வேலைகளில் இறங்க உள்ளேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்