திட்டு, அடி வாங்கும் ‘டிவி பிரகாஷ்ராஜ்’

By மகராசன் மோகன்

சன் டிவியில் ஒளிபரப்பான ‘ஸ்டார் வார்’ நிகழ்ச்சியில் ரன்னர் பட்டத்துடன் வெளியே வந்த பவித்ரன் தற்போது ‘சின்னத்திரை பிரகாஷ்ராஜ்’ என்று பெயர் வாங்கி வருகிறார். சன் டிவியில் ‘குலதெய்வம்’, ஜீ தமிழ் சேனலில் ‘பூவே பூச்சூடவா’ ஆகிய தொடர்களில் வில்லனாக அசத்திய இவர், தற்போது ‘கல்யாண வீடு’ தொடரில் நாயகன் திருமுருகன் குடும்பத்துக்கு பெரிய அளவில் பாதிப்புகளை விளைவிக்கும் வில்லனாக நடித்து வருகிறார்.

‘‘சமீபத்தில் ஒரு ஊருக்கு போயிருந்தேன். அங்கு ஒரு பாட்டி. ‘குலதெய்வம்’ சீரியலின் தீவிர ரசிகை போல. என்னைப் பார்த்ததும் பளார்னு அடிச்சிட்டாங்க. அந்த வலி சந்தோஷத்தை கொடுத்தது. ரெண்டாவதா ‘பூவே பூச்சூடவா’ தொடர்லயும் வில்லன் அவதாரம். செம ரெஸ்பான்ஸ். அது தெலுங்கு சீரியலின் ரீமேக். என் கேரக்டர் நிறைவு பெற்றதால அங்கே இருந்து அப்படியே தாவி,  இப்போ ‘கல்யாண வீடு’ தொடருக்குள் வந்துட்டேன். இயக்குநர் திருமுருகன் பற்றி சொல்லவே வேண்டாம். செம குவாலிட்டியா  வேலை வாங்குவார். இப்போது, சினிமா பக்கமும் கதவு திறந்திடுச்சு’’ என்று உற்சாகமாக கூறுகிறார் பவித்ரன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்