இயக்குநர் மணிரத்னம் ஒரு ஆசான் என்று இயக்குநர் செல்வராகவன் புகழாரம் சூட்டியுள்ளார்.
நேற்று (ஜூன் 2) இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகியோரது பிறந்த நாளாகும். இதனால் சமூக வலைதளத்தில் பலரும் இருவருக்கும் தங்களுடைய வாழ்த்துகளைக் கூறி வந்தார்கள்.
மணிரத்னம் மற்றும் கே.பாலசந்தர் இருவரையும் ஆசானாக கருதுபவர் இயக்குநர் செல்வராகவன. இதனை பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். நான் இயக்குநராக மணிரத்னமும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
இது தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் செல்வராகவன், “நான் இயக்குநராக மணிரத்னமும் ஒரு காரணம். அவருக்கு முன் எனக்கு கே பாலசந்தரின் படங்கள் மிகவும் பிடிக்கும். அவர் பல விதங்களில் ஒரு முன்னோடி. ஆனால் 'தளபதி', 'பாம்பே' என மணிரத்னம் படங்களைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன்.
அவற்றோடு என்னால் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவர் ஒரு ஆசான். அது அவர் 'ரோஜா' எடுக்கும்போது அப்பட்டமாகத் தெரிந்தது. அந்தப் படத்தைப் பார்க்கும்போது நான் வாயடைத்துப் போனேன். அவரது ஒவ்வொரு படமும் ஏதோ ஒரு வகையில் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
நேற்று (ஜூன் 2) மணிரத்னம் பிறந்த நாளை முன்னிட்டு செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில், “நான் ஒரு இயக்குநராக காரணமாக இருந்த மணிரத்னம் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் படங்களின் வழியே நான் நிறைய கற்றுக்கொண்டேன். உங்கள் வாழ்க்கையைப் பார்த்தும் நான் இன்னும் அதிகமாக கற்றுக்கொண்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
சினிமா
30 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago